ஜெம் புற்றுநோய் மையம்கருப்பைஅறுவைசிகிச்சை

Loading

கோவை இராமநாதபுரம் பகுதியில் உள்ள ஜெம் புற்றுநோய் மையம் சார்பில் இந்தியாவில் முதன்முறையாக மேம்பட்ட கருப்பை புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். 
கோவை இராமநாதபுரம் பகுதியில் உள்ள ஜெம் மருத்துவமனையில் மேம்பட்ட வயிற்று பகுதி புற்றுநோய்களுக்கு புதிய அறுவை சிகிச்சை முறைகளை செய்து இந்தியாவின் முதல் சிகிச்சை முறையை அறிமுகம் செய்துள்ளது..
இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு ஜெம் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜெம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பழனிவேலு கூறியதாவது..
பெரிட்டோனியல் கார்சினோ மாட்டோசிஸ் எனும் குடல், வயிறு மற்றும் கருப்பை போன்ற மேம்பட்ட நிலை வயிற்றுப் பகுதி புற்றுநோய்களில் காணப்படும் ஒரு கடுமையான நோய்  இந்த நோய் பாதிக்கபட்ட நோயாளிகள் கடுமையான வலி, மற்றும் குறைந்த ஆயுள் ஆகியவற்றை எதிர்கொள்கின்றனர், முன்னதாக இத்தகைய நோய்களுக்கு கீமோதெரபி மட்டும் செய்து வந்த நிலையில், சைட்டோரேடக்டிவ் சர்ஜரி, மற்றும் ஹைபர்தெர்மிக் கீமோதெரபி ஆகியவை இணைந்து நோயாளிகளுக்கு செய்ய படுவதால், நோயாளிகள் குறைந்த நாட்களில் சிகிச்சையில் இருந்து வீடு திரும்புவதாக தெரிவித்தார். இன்றைய தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக, இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை லேப்ராஸ்கோபி முறையில் உடலில் சிறு துளையிட்டு அந்த துளைகள் வழியாக சிறப்பாக செய்து முடிப்பதாகவும், இதனால் வயிற்றில் உள்ள பெரிட்டோனியம் என்றழைக்கப்படும் புற்றுநோய் செல்களை முற்றிலும் அகற்ற முடியும் என்றார். இந்த முறையில் நமது மருத்துவமனையில் இது வரை 5 நபர்களுக்கு செய்து அவர்கள் ஒரு வார காலத்தில் வீடு திரும்பி விட்டதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த முறையில் சிகிச்சை அளிக்க படுவதால், குறைந்த வலி, குறைந்த இரத்த இழப்பு, இரத்த மாற்றம், தேவைப்படுவதில்லை இதனால் நோயாளிகளின் எதிர்ப்பு சக்தி பாதிக்கபடுவதில்லை என்றார் இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் பொழுது, மருத்துவர்கள், கவிதா, சாய் தர்ஷினி, பரத் ரங்கநாதன், சிவக்குமார், அருள் முருகன், பார்த்த சாரதி, ராஜபாண்டியன், மது சாய்ராம், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0Shares