கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள்
![]()
கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு :
திருவள்ளூர் டிச 28 : கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் தொடுக்காடு ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் பழங்குடியினர்களுக்கு ரூ.3.15 கோடி மதிப்பீட்டில் 72 வீடுகளின் கட்டிட கட்டுமான பணிகளையும் மற்றும் தனியார் நிறுவனங்களின் சார்பில் சமூக பங்களிப்பு நிதி (சிஎஸ்ஆர்) திட்டத்தில் 48 வீடுகளின் கட்டிட கட்டுமான பணிகளையும், பேரம்பாக்கம் ஊராட்சியில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தையும் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும், தண்டலம்-பேரம்பாக்கம்-தக்கோலம்- அருகில்படி ஆகிய பகுதிகளை இணைக்கும், நெடுஞ்சாலைகள்துறை சார்பில் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சிறு பாலம் கட்டுமானப் பணிகளையும், கொண்டஞ்சேரி சத்தரை ஊராட்சி பகுதியில் ரூ.13.97 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பாலம் கட்டுமானப் பணிகளையும் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை உரிய காலத்திற்குள் துரிதமாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதில் ஊரக வளர்ச்சி துறை உதவி பொறியாளர் அருள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சௌந்தரி,நடராஜன்,உதவி செயற்பொறியாளர் மதியழகன், உதவி செயற்பொறியாளர் அரவிந்த், உதவி செயற்பொறியாளர் செந்தில்குமரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

