விசாரணை நடைபெறும் அலுவலகம் AERO & கூடுதல்
![]()
ஈரோடு
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி கடந்த 04.11.2025-ஆம் தேதி முதல் 16.12.2025-ஆம் தேதிவரை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேற்படி நடவடிக்கையின் முதற்கட்ட பகுதியாக, 27.10.2025 அன்று வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்த 19,97,189 வாக்காளர்களுக்கு, கணக்கெடுப்பு படிவம், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) மூலம் 04.11.2025 முதல் விநியோகம் செய்யப்பட்டது. வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்டு பெறப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு (19.12.2025) அன்று அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.
இதனை தொடர்ந்து, (26.12.2025)அன்று இரண்டாவது கட்டத்தில் விசாரணை மேற்கொள்ளப்படுவதற்காக கூடுதலான நியமிக்கப்பட்ட அனைத்து உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் ஈரோடு, மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் ஈரோடு, மாவட்ட வருவாய் அலுவலர் (பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி மையம்), வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் கூடுதலாக நியமிக்கப்பட்ட 167 உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் 2002-ம் ஆண்டு வாக்களர் பட்டியலுடன் ஒத்துபோகாத வாக்காளர் (No Mapping) இனங்களில் உள்ள 46,400 நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளும் பொருட்டு 08 வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் 167 உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி, 175 அலுவலர்களுக்கு விசாரணை மேற்கொள்ளப்படுவதற்கான நோட்டீஸ் வழங்குவது, விசாரணை அறிவிப்பு இணையதளத்தில் உள்ளீடு செய்வது, விசாரணை அறிவிப்பு வழங்கும் முறை, தினசரி மேற்கொள்ளப்பட வேண்டிய விசாரணைகளின் எண்ணிக்கை, விசாரணை நடைபெறும் நாள், நேரம் மற்றும் விசாரணை நடைபெறும் அலுவலகம், AERO & கூடுதலாக நியமிக்கப்பட்ட பணியாளர்களுக்கான பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் விரிவான செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், இணையதளம் உள்ளீடு மற்றும் வாக்கு சாவடி நிலை அலுவலர் செயலியில் உள்ளீடு குறித்து செயல் விளக்கமும் அளிக்கப்பட்டது.

