ரூ.5 லட்சம் மதிப்பிலான எறும்புத்தின்னி பறிமுதல்
![]()
திருவள்ளூரில் ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான எறும்புத்தின்னி பறிமுதல் : இரண்டு பேரை கைது : மேலும் தப்பி ஓடிய இரண்டு பேரை தேடி வருகின்றனர் :
திருவள்ளூர் டிச 26 : எறும்புத்தின்னி அவற்றின் இறைச்சி செயல்களுக்காக பெருமளவில் வேட்டையாடப்பட்டு கடந்த 20 ஆண்டுகளாக உலகெங்கும் பல நாடுகளுக்கு கடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக சீனாவில் இரும்புத் தின்னிகள் பாதுகாக்கப்பட்ட விலங்கினமாக வகைப்படுத்தப்பட்டாலும் கடத்தப்பட்ட செதில்கள் சீன சந்தையில் ஒரு கிலோ கிராமுக்கு சுமார் 500 டாலர் வரை விற்கப்படுகிறது. பாரம்பரிய சீன மருத்துவத்தில் எறும்புத்தின்னி செதில்கள் பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன் சீனா, வியட்னாம் போன்ற இடங்களில் இரும்புத் தின்னிகள் இறைச்சி உண்ணப்படுகிறது.
இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் வேட்டையாடி 10 கிலோ எடை கொண்ட ஆண் எறும்புத்தின்னி கடத்தி வரப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட வன அலுவலர் சுப்பையாவுக்கு தகவல் கிடைத்து. இதையடுத்து மாவட்ட வனச்சரக அலுவலர் அருள்நாதன் மற்றும் வனவர்கள் ரவிக்குமார், சசிக்குமார் ஆகியோர் வேப்பம்பட்டு பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்தினர். இதில் இரு சக்கர வாகனங்களில் வந்தவர்கள் தப்பியோடினர்.
இதனையடுத்து ஆட்டோவில் சோதனை மேற்கொண்ட போது எறும்புத்தின்னி கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து எறும்புத்தின்னியை மீட்ட வனச்சரக அலுவலர்கள் ஆட்டோவில் வந்த நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பாலமணி(67), திருவள்ளூர் சுரேஷ், 42 ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தினர். சென்னையில் ஐந்து லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்வதற்காக இந்த இரும்புத் தின்னியை கொண்டு வந்ததாக தெரிவித்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வன வனச்சரக அலுவலர்கள் ஆட்டோ, ஸ்பிளெண்டர், டியோ என மூன்று வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய திருவள்ளுவர் சேர்ந்த லோகேஸ்வரன் விஜய் இரண்டு பேரையும் தேடி வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

