உயர்கல்வி மற்றும் தொழில் நுட்ப கல்வி நிதி உதவி

Loading

முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உயர்கல்வி மற்றும் தொழில் நுட்ப கல்வி நிதி உதவி : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் :
திருவள்ளூர் டிச 25 : திருவள்ளூர் மாவட்டத்தில் வறிய நிலையில் உள்ள ஏழை எளிய மாணாக்கர்கள்  அரசு,அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக்  கல்லூரிகள், வேளாண்மைக் கல்லூரிகள் மற்றும் சட்டக் கல்லூரிகளில்  ஒற்றை சாளர முறையில் சேர்க்கை பெற்றுள்ள மாணாக்கர்கள் அவர்களின் குடும்பத்தில் இதுவரை பட்டதாரிகளே இல்லை என்றால் அவர்களை ஊக்குவிக்கும் வகையில்  தொழில்நுட்பக் கல்வி மற்றும் உயர்கல்வி பயில்பவர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி வழங்கும் திட்டத்தில் இருந்து ரூ.50 ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மேற்படி முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து கல்வி உதவித்தொகை பெற தகுதியுடைய மாணாக்கர்கள்  விண்ணப்பங்களை தங்களுடைய வட்டாட்சியர்  அலுவலகத்தில் பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், மனுதாரரின் அசல் மனு, தமிழ்நாட்டில் வசிப்பவர் என்பதற்கான நிரந்தரச் சான்று, குடும்பத் தலைவரின் வருமானச்சான்று (ரூ.72,000 மிகாமல் இருக்க வேண்டும்), குடும்ப உறுப்பினர்களின் வயது கல்வித் தகுதி மற்றும் வருமானச் சான்று, ஒற்றைச் சாளர முறை வழியாக சேர்க்கை பெற்றதற்கான சான்று, இருப்பிடச் சான்று ஆகிய ஆவணங்களுடன் இணைத்து அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
0Shares