மாணவர்களுக்கு கராத்தே பெல்ட் டிரேடிங் நிகழ்ச்சி

Loading

கோவை
கோவை உக்கடம் பகுதியில் உள்ள தீர்க்கத்துல் இஸ்லாமிய பள்ளி வளாகத்தில், பெஸ்ட் வே மார்ஷியல் ஆர்ட்ஸ் பள்ளி மாணவர்களுக்கு கராத்தே பெல்ட் டிரேடிங் நிகழ்ச்சி நடைபெற்றது..
கோவையில் கடந்த 25 ஆண்டுகளாக சிலம்பம், கராத்தே போன்ற பல்வேறு பயிற்சிகளை பெஸ்ட் வே மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி அளித்து வருகிறது. இதன் தலைமை ஆசானாக சிஹான் ஜெமிஷா இருந்து மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளித்து வருகிறார். இது வரையிலும் சுமார் 2000 த்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களுக்கு கராத்தே பயிற்சி அளித்து உள்ள நிலையில், இவரிடம் கராத்தே பயிற்சி பெற்ற பலரும் தற்போது கராத்தே ஆசிரியர்களாகவும் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் மாணவ மாணவியர்களுக்கு சுமார் 6மாத காலம் பயிற்சி அளிக்க பட்டு பின்னர் அவர்களுக்கு போட்டிகள் நடத்த படும். அதில் சிறப்பாக செயல்படும் மாணவ மாணவிகளுக்கு கராத்தே பயிற்சியில் அடுத்த கட்ட நிலை என்றழைக்கப்படும் பெல்ட்கள், சான்றிதழ்கள், அதற்கான மெடல்கள் வழங்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் இப்பயிற்சி மையத்தில் தற்போது கராத்தே பயிற்சி பெற்று வரும் சுமார் 120 மாணவ மாணவர்களுக்கு இன்று உக்கடம் பகுதியில் உள்ள தீர்க்கத்துல் இஸ்லாமிய பள்ளி வளாகத்தில் பெல்ட் கிரேடிங் டெஸ்ட் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பாக விளையாடி அடுத்த கட்ட நிலைக்கு சென்ற அனைவருக்கும் அதற்கான சான்றிதழ்கள், மெடல்கள் வழங்க பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தீர்க்கத்துல் இஸ்லாமிய பள்ளியின் தாளாளர் அபுல் ஹீதா தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் பக்கீரம்மாள் முன்னிலை வகித்தார். பள்ளியின் துணை தலைமை ஆசிரியர் ரிஜ்வானா வரவேற்ப்புரையாற்றினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய கராத்தே பயிற்சியாளர் சிஹான் ஜெமிஷா கூறியதாவது..
இன்றைய பள்ளி மாணவர்களுக்கு தற்காப்பு கலை மிகவும் அவசியமாக உள்ளது. கராத்தே பயிற்சி கற்று கொள்ளுவதால் மாணவர்கள் கோபங்களை கட்டுப்படுத்தி, மனதை ஒரு நிலை படுத்துவதற்க்கு பழக்க படுத்தி கொள்கின்றனர் இது அவர்களின் மூளை தூண்டலை அதிக படுத்துகின்றது. இதனால் தேர்வுகளை கூட எளிதில் கையாளுவதாகவும் அதிக மதிப்பெண்கள் பெறுவதாகவும் தெரிவித்தார் இந்த நிகழ்ச்சியில், கராத்தே பயிற்சியாளர்கள், முக்தார், பாத்திமா, கோவை மாவட்ட உடற்பயிற்சி சங்க தலைவர் சுகுமாறன், மற்றும் மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0Shares