தமிழ்நாடு செட்யூல்டு ட்ரைப் மலையாளி பேரவை
![]()
தமிழ்நாடு செட்யூல்டு ட்ரைப் (மலையாளி) பேரவையின் சேலம் மாவட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம்.
சேலம்.டிச.22
சேலம், ரோட்டரி கிளப் அரங்கத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், பழங்குடி மக்களுக்கு வீட்டுமனை பட்டா, சுய தொழில் செய்வதற்கு நிதி உதவி மற்றும் தாட்கோ மூலம் மானிய கடன், இலவச விவசாய நிலம், வன விரிவாக்கத்தில் அம்மக்களுக்கே நிலத்திற்கான உரிமை வழங்கிடவும், பஞ்சாயத்திற்கு ஒரு லேம்ப் சொசைட்டி, ஆரம்ப சுகாதார மையம், சாலை வசதி, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 3% இட ஒதுக்கீடு வழங்கிடவும், ஈரோடு மாவட்டத்தில் வாழ்ந்து வரும் இந்து-மலையாளி மக்களை பழங்குடி மக்களாக அங்கீகரித்து எஸ்.டி சான்று வழங்கிட வேண்டியும் போன்ற 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், சேலம் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார், மாவட்ட துணைத் தலைவர் மணிகண்டன் வரவேற்பு உரையாற்றினார், மாவட்டச் செயலாளர் சின்னசாமி ஆண்டறிக்கையும், மாவட்ட பொருளாளர் மோகனசுந்தரம் வரவு செலவு கணக்கையும் வாசித்தனர், மாநில ஆலோசகர் பெருமாள் மற்றும் மாநில அமைப்பு செயலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர், மாவட்டத் துணைத் தலைவர் மாணிக்கம் நன்றியுரை ஆற்றினார், ஒன்றிய செயலாளர் பழனிவேல் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

