உலகம்முழுவதும்இருந்து25ஆயிரம்பேர்பங்கேற்றனர்

Loading

கோவை
கோவையின் மிகப்பெரிய மாரத்தான் போட்டியான, கோயம்புத்துார் மராத்தான் 2025-ன் 13- வது பதிப்பு நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள உலகம் முழுவதும் இருந்து 25,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஓடினர்..
கோவையில் ஆண்டு தோறும் மிகப்பெரிய மாரத்தான் போட்டி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு கோயம்புத்தூர் மாரத்தான் 2025 எனும் மாரத்தான் போட்டி நடைபெற்றது.
புற்று நோய்க்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் புற்று நோயாளிகளுக்கு நிதி திரட்டும் விதமாக நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியை  கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர், மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும், எல்லைப் பாதுகாப்புப் படையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஐஜி பாலகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கிவைத்தனர். கோவை வ.உ.சி மைதானம் அருகே துவங்கிய இதில் 21 கிலோ மீட்டர்,10,கிலோ மீட்டர், 5கிலோ மீட்டர்  மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான ரிலே ஓட்டம்   என நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது, இதில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஓடினர். .
மேலும் இது குறித்து கோயம்புத்தூர் புற்றுநோய் அறக்கட்டளையின் மேனேஜிங் டிரஸ்டி டாக்டர்  பாலாஜி கூறியதாவது..
சாதனை படைக்கும் பதிவு எண்ணிக்கையுடன் கூடிய மற்றொரு வெற்றிகரமான நிகழ்வாக இதனை கருதுவதாகவும், இந்த மாரத்தான் போட்டியினை உலகத்தரம் வாய்ந்த அளவில்  நடத்த முடிந்ததற்கு, மாவட்ட ஆட்சித் தலைவர், போலீஸ் கமிஷனர், கார்ப்பரேஷன் கமிஷனர் மற்றும் அனைத்து அரசு நிறுவனங்களின் உதவிக்கு நன்றி என தெரிவித்தார். தொடர்ந்து
ரேஸ் டைரக்டர், ரமேஷ் பொன்னுசாமி கூறியதாவது.. “கோயம்புத்தூர் மாரத்தானின் 13வது பதிப்பு பெரிய வெற்றியை பெற்றுள்ளது, இது வளர்ந்து வரும்,  பொழுதுபோக்கிற்காக நீண்ட தூர ஓட்டத்தின் மீது கொண்டுள்ள ஆர்வம், மற்றும் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும்.  நடத்தப்படும் ஒவ்வொரு வெற்றிகரமான நிகழ்வும் எனது அணிக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கும் ஒரு அனுபவமாக கருதுவதாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
0Shares