கோக்கால் உயர்நிலைபள்ளியில் இலவச கண்சிகிச்சை
![]()
உதகை
உதகை அருகே சோலூர் கோத்தகிரி, கோக்கால் அரசு உயர்நிலை பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் சோலூர் கோத்தகிரி, கோக்கால் அரசு உயர்நிலைப்பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியன சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற பொறுப்பு ஆசிரியர் ராஜா தலைமை தாங்கினார். பள்ளி ஆசிரியர்கள் ராஜேஷ்குமார், டார்த்தி சாந்தி, சமூக ஆர்வலர் ராஜா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் முகாமினை துவக்கி வைத்தார். உதகை அரசு மருத்துவக்கல்லூரி கண் மருத்துவ பிரிவு மருத்துவ அலுவலர் தாவா தலைமையில் ஶ்ரீநாத் அந்தோணியம்மாள், உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் கோக்கால், கண்ணேரிமுக்கு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த 100கும் மேற்பட்ட மக்கள் பரிசோதனை செய்து கொண்டனர். 26 பேருக்கு கண்புரை பாதிப்புக்கு இருப்பது கண்டறியப்பட்டது. உதகை அரசு மருத்துவக்கல்லூரிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
முகாமிற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகம் மற்றும் குடல் நுகர்வோர் பாதுகாப்பு மைய நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

