உதவி ஆய்வாளர்பணிக்கு எழுத்துத்தேர்வு டி ஐ.ஜி ஆய்வு
![]()
உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு..!
டி ஐ.ஜி நேரில் ஆய்வு..!
ஈரோடு டிசம்பர் 22
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 2025 ம் ஆண்டிற்கான உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் மாநிலம் முழுவதும் காவல்துறையில் உள்ள உதவி ஆய்வாளர்களின் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, ஈரோடு மாவட்டத்தில் நேற்று 21.12.2025 ம் தேதி காலை 1000 மணி முதல் 1230 மணி வரை முதன்மை தேர்வும், பிற்பகல் 03.30 மணி முதல் மாலை 05.10 மணி வரை தமிழ் மொழி தகுதித் தேர்வும் நடைபெற்றது
இத்தேர்வினை ஈரோடு மாவட்டத்தில் எழுதும் 3491 பேரில் (837 பெண்கள் உட்பட) தேர்வர்களுக்கு வழங்கப்படும் வினாத் தாள்கள் சென்னை தமிழ்நாடு சீருடைப் பணியா தேர்வாணையத்திலிருந்து தேர்வர்களுக்காக கொண்டு வரப்பட்டு, வினாத் தாள்கள் ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் ஆயுதம் ஏந்திய பாதுகாப்பில் வைக்கப்பட்டது. 21.12.2025 ம் தேதி காலை 07.00 மணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலை உரிய அதிகாரிகள் மூலம் அந்தந்த தேர்வு மையங்களுக்கு ஆயுதம் ஏந்திய வழிக்காவலுடன் எடுத்துச் செல்லப்பட்டு, வழிகாட்டு நெறிமுறைகளின்படி நடைபெற்றது இந்த தேர்வுகள் அனைத்தும் V. சசிமோகன், இ.கா.ப, காவல் துணை தலைவர், கோவை சரகம், கோவை அவர்களின் நேரடி கண்காணிப்பில், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் A. சுஜாதா தலைமையில் துணை உறுப்பினர்களாக M. விவேகானந்தன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், தலைமையில் ஈரோடு, V. தங்கவேல், காவல் துணைக்கண்காணிப்பாளர், மாவட்ட குற்ற பதிவேடு மற்றும் . K. ராஜபாண்டியன், காவல் துணை கண்காணிப்பாளர், குடிமை பொருள் புலனாய்வு துறை, (Civil Supply CID) ஈரோடு சரகம் ஆகியோர் நியமிக்கப்பட்டு நடத்தப்பட்டது. மேலும் இத்தேர்வு பணிக்கு 300 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் மேற்பார்வையாளர்களாகவும், கண்காணிப்பு குழு பொறுப்பாளர்களாகவும் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் அடங்கிய குழுக்கள் வழிகாட்டு நெறிமுறைகளின்படி அமைக்கப்பட்டு தேர்வு நடைபெறுகிறது.

