யுனைட்டெட் கல்வி நிறுவனம் ,கே.ஆர். மருத்துவமனை

Loading

கோவை
யுனைட்டெட் கல்வி நிறுவனம் கே.ஆர். மருத்துவமனை இணைந்து 
பிட் இந்தியா சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மராத்தான்
1000 த்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு ஓடினர்
கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் யுனைடெட் கல்வி நிறுவனமும், கே. ஆர் மருத்துவமனையும், கோவை ரோட்டரி எலைட் சங்கமும் இணைந்து நடத்திய பிட் இந்தியா சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மராத்தான் போட்டியில் 1000 த்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ஆர்வமுடன் ஓடினர். வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு, மெடல் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
கோவை பெரியநாயக்கன்பாளையம் யுனைடெட் கல்வி நிறுவனமும், கே. ஆர் மருத்துவமனையும், கோவை ரோட்டரி எலைட் சங்கமும் இணைந்து பிட் இந்தியா சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டியினை நடத்தினர்.
ஜூனியர் மற்றும் சீனியர் என 2 பிரிவுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில்16 வயதிற்கு மேற்பட்டோருக்கான 6 கிலோ மீட்டர் மராத்தான் போட்டி பெரியநாயக்கன்பாளையம் தாரகா மஹாலில் இருந்து தொடங்கியது.துவக்க விழாவில் கோவை ரோட்டரி எலைட் சங்கத்தின் தலைவர் கோபிநாத், கே ஆர் மருத்துவமனையின் இயக்குனர் மருத்துவர் திலகம் ராஜேஷ்,  யுனைடெட் கல்விக் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் பொறியாளர் சண்முகம், யுனைடெட் பப்ளிக் பள்ளி செயலர் மைதிலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஜூம்பா நடத்துடன் தொடங்கிய இப்போட்டியில் சிறப்பு விருந்தினராக  பெரியநாயக்கன்பாளையம் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர்  பொன்னுசாமி மராத்தான் போட்டியில் பங்கேற்ற வீரர் வீராங்கனைகளிடம் உடல் நலத்தை பேணிக்காப்பது குறித்தும், சாலை பாதுகாப்பு குறித்தும் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் அனைவரும் கைகளை நீட்டி சாலை பாதுகாப்பு குறித்தான உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
தொடர்ந்து போட்டியினை கொடியசைத்து காவல் துணைக் கண்காணிப்பாளர் பொன்னுசாமி துவக்கி வைத்தார்.  அதேபோல் 16 வயதிற்குட்பட்டோருக்கான 5 கிலோ மீட்டர் மராத்தான் போட்டி பெரியநாயக்கன்பாளையம் கே ஆர் மருத்துவமனையின் வளாகத்தில் இருந்து தொடங்கியது.
ஜும்பா நடனத்துடன் தொடங்கிய இதில் டி எஸ் பி பொன்னுசாமி சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு உரையாற்றி உறுதிமொழி எடுத்தனர். தொடர்ந்து போட்டியினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
1000த்திற்கும் மேற்பட்டோர் பங்கு பெற்ற இப்போட்டியானது. பெரியநாயக்கன்பாளையம் தாரகா மஹால் மற்றும் கே ஆர் மருத்துவமனை வளாகத்தில் இருந்து தொடங்கிய இந்த மாராத்தான் யுனைடெட் கல்லூரியில் முடிவடைந்தது.இப்போட்டியில் ஒவ்வொரு பிரிவுகளிலும் முதல் 3 இடங்களை பிடித்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மெடல்கள், சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. மேலும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் மெடல்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இறுதியில் யுனைடெட் கல்வி குழுமத்தின் நிர்வாக இயக்குனர் முனைவர் சிவகுமார் நன்றியுரை வழங்கினார். பங்கேற்பாளர்களுக்கு காலை உணவும், சான்றிதழும்,பதக்கமும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் யுனைடெட் கல்வி குழுமத்திற்குட்பட்ட அனைத்து கல்லூரி முதல்வர்கள், ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
0Shares