வேலூர் சிஎஸ்ஐ மத்திய ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா
![]()
வேலூர்
வேலூர் சிஎஸ்ஐ மத்திய ஆலயத்தில் அனைத்து ஐக்கிய சங்கமும் இணைந்து கிறிஸ்துமஸ் விழாவை வெகு சிறப்பாக கொண்டாடினார்கள். தலைமை ஆயர் எஸ் சைமன் அவர்கள் தலைமையில் கிறிஸ்து பிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
செயலாளர் ஜோஸ்வா முன்னிலை வைத்தார். இதில் வேலூர் பேராய பொருளாளர் ஆண்ரூ ரத்தினசிங் மற்றும் உதவி ஆயர்கள் மற்றும் ஆண்கள் ஐக்கிய சங்கத்தினர்கள் பெண்கள் ஐக்கிய சங்கத்தினர் கலந்து கொண்டனர். பாடல் குழுவினர்கள் சிறப்பு பாடலை பாடினார்கள். கிறிஸ்மஸ் விழாவிற்கான ஏற்பாடுகளை பொருளாளர் டி ஆரோன் ஸ்டாலின் மற்றும் ஆண்கள் ஐக்கிய சங்கத்தினர் செய்திருந்தார்கள்.

