உயிரிழந்த மாணவன் குடும்பத்திற்கு ரூ.5 இலட்சம்

Loading

திருத்தணியில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த மாணவன் குடும்பத்திற்கு ரூ.5 இலட்சத்திற்கான காசோலை மற்றும் வெளிச்சந்தையில் பணி நியமன ஆணை : அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார் :
திருவள்ளூர் டிச 19 : திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொண்டாபுரம் ஊராட்சியில் அரசு பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவன் மோஹித் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த நிலையில் அவரது குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 இலட்சத்திற்கான காசோலையினையும் மற்றும் இரா.கி.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மசால்ஜி பணிக்கு.சரத்குமார் என்பவருக்கு மாவட்ட மகமை சார்பில் வெளிச்சந்தையில் பணி நியமன ஆணையினையும் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர்,மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் மற்றும் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் ஆகியோர் வழங்கினர். அப்பொழுது அமைச்சர் கூறியதாவது :
நேற்றைய தினம்  நடந்த அகால விபத்து இரா.கி.பேட்டை ஊராட்சி ஒன்றிய கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கின்ற மாணவன் மோஹித் (வயது 12), 7-ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்தார். பள்ளி சுவர் இடிந்து  விழுந்து அந்த இடத்திலேயே அகால மரணம் அடைந்தார். அதை அறிந்த உடன் தமிழ்நாடு முதல்வர் அந்த குடும்பத்திற்கு ரூ.5 இலட்சம் நிதி உதவியும் அவருடைய தகப்பனாருக்கு அரசு பணியான மசால்ஜி வழங்கி  இறுதி சடங்கு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. தமிழ்நாடு முதல்வர் நிதி உதவியும் அவர்களுக்கு அரசு வேலையும் வழங்கி உள்ளார்.
இதனை மாவட்ட ஆட்சியர் சிறப்பான முறையில் வழி வகுத்து கொடுத்தும், அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த சட்டமன்ற உறுப்பினர்,நாடாளுமன்ற உறுப்பினர் பிற தலைவர்கள் முயற்சி செய்து குடும்பத்திற்கு  நிவாரண உதவி மற்றும் ஊரக வளர்ச்சி துறையில் வேலையும் கொடுத்திருக்கிறார்கள் என்று அமைச்சர் கூறினார். இதில் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் என்.எம்.கனிமொழி, திருத்தணி வட்டாட்சியர் குமார், இரா.கி.பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் மில்கி ராஜசிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0Shares