சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 7-ம் வகுப்பு மாணவன் பலி
![]()
ஆர்கே பேட்டை அருகே கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 7-ம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது :
திருவள்ளூர் டிச 18 : திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டை அடுத்த கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 150க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கொண்டாபுரம் பகுதியை சேர்ந்த சரத்குமார் என்பவவரது மூத்த மகன் மோகித் அந்தப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தான்.
இந்நிலையில் அரையாண்டு தேர்வை முன்னிட்டு தேர்வு எழுதிய மாணவர்கள் உணவு இடைவேளையின் போது உணவு வாங்கிக் கொண்டு பள்ளி கைப்பிடி சுவர் மீது அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது பழமை வாய்ந்த கட்டிடம் என்பதால் அந்த சுற்றுச்சுவர் சரிந்து விழுந்தது. இதில் அந்த கைப்பிடி சுவற்றின் மீது அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த மோகித் என்ற ஏழாம் வகுப்பு பயிலும் மாணவன் கீழே விழுந்த போது சுற்றுச்சுவர் மாணவன் மீது விழுந்ததில் பலத்த காயமடைந்த மாணவன் மோகித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
தகவல் அறிந்து திருத்தணி டிஎஸ்பி (பொறுப்பு) கந்தன், வட்டாட்சியர் சரஸ்வதி ஆகிய சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் ஏழாம் வகுப்பு படிக்கும் கொண்டாபுரம் காலனி பகுதியைச் சேர்ந்த மோகித் வயது 12 என்ற மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இறப்பு சம்பந்தமாக ஆர்.கே.பேட்டை போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

