சீயோன்பெந்தகோஸ்தே சபையின்21ஆம்ஆண்டுவிழா

Loading

வேலூர் –

சீயோன் பெந்தகோஸ்தே சபையின் 21 ஆம் ஆண்டுவிழா

வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள சீயோன் பெந்தகோஸ்தே சபையின் 21 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு நேற்று திருச்சபையில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி கலந்து கொண்டார். சீயோன் பெந்தேகோஸ்தே சபையின் தலைமை போதகர் இம்மானுவேல் பால் அவர்கள் விழாவின் சிறப்பு அழைப்பாளர்களான சட்டமன்ற உறுப்பினர் திரு நந்தகுமார் மற்றும் கார்த்திகேயன் அவர்களை வரவேற்றார். வேலூர் மாநகர மேயர் சுஜாதா ஆனந்தகுமார் அவர்களை லிடியா இமானுவேல் அவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இந்த சிறப்பு ஜெப கூடுகை காண ஏற்பாடுகளை எஸ்ரா ஜானதன் மற்றும் பெஞ்சமின் ஜாஷ்வா ஆகியோர் செய்திருந்தனர்.
விழாவில் கலந்துகொண்டு ஏழை எளிய மக்கள் 200 பேருக்கு சிறப்பு விருந்தினர்கள் ஆடைகளை வழங்கினார்கள். சிறப்பு விருந்தினர்கள் உரையாற்றும் பொழுது ஒழுக்கம் சமாதானம் பகுந்தளிப்பு மற்றும் ஏழை எளிய மக்களுக்கு உதவுவது மூலம் கிறிஸ்துவ மக்கள் கிறிஸ்துமஸ்ஸை சந்தோஷத்துடன் கொண்டாடுகிறார்கள் என்று கூறினார்கள்.

0Shares