திறனாய்வு போட்டி 1200 மாணவர்கள் பங்கேற்றனர்
![]()
கோவையில் தேசிய அளவில் 2.4 லட்சம் மாணவர்கள் பங்கேற்கும் ‘லீட் சாம்பியன்ஷிப்’ போட்டி! பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவில் நடைபெறும் மிகப்பெரும் திறனாய்வு போட்டியின் கோவை மண்டல சுற்றில் 1200 மாணவர்கள் பங்கேற்றனர்.
கோவை
இந்தியாவின் முன்னணி பள்ளி கற்றல் சேவைகளை வழங்கும் நிறுவனமான ‘லீட்’ நிறுவனம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான 2025 தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றுவருகிறது. பள்ளி மாணவர்களின் திறனை வெளிப்படுத்த, படைப்பாற்றல், கற்றல் திறன் ஆகியவற்றை கொண்டு பிற மாணவர்களுடன் ஆரோக்கியமாக போட்டியிடும் வாய்ப்பை இந்த போட்டி வழங்குகிறது 7வது முறையாக நடைபெறும் இந்த போட்டியின் ஒரு பிரிவாக கோவை மண்டலத்தில் உள்ள மாணவர்கள் பங்கேற்கும் வகையில் இப்போட்டிகள் நடக்கிறது. இன்று கோவை அவிநாசி சாலையில் உள்ள சிட்ரா அரங்கத்தில் கோவை மண்டலச் சுற்று வெற்றிகரமாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகாவில் உள்ள ‘லீட்’ நிறுவனத்தின் சேவைகளில் சிறப்பாக இயங்கும் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 1200 மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளித் தலைவர்கள் மற்றும் பெற்றோர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். நர்சரி முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் இதில் பங்கேற்றனர். இவர்களில் பலருக்கு, ஒரு நேரடி பார்வையாளர்கள் முன்னிலையில் தங்கள் சிந்தனையை முன்வைப்பது, நிகழ்ச்சிகளை நடத்துவது, பேசுவது மற்றும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது இதுவே முதல் மேடை அனுபவமாக இருந்தது என்பது ஒரு சிறப்பு.லீட் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரியும் இணை நிறுவனருமான சுமீத் மேத்தா இது குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது..
“இன்றைய பள்ளி கல்வியில் நாம் காணும் மிகப் பெரிய குறைபாடு திறனில் அல்ல, தன்னம்பிக்கையில்தான் உள்ளது. பல மாணவர்கள் கருத்துக்களை நன்கு புரிந்துகொண்டாலும், தங்கள் சிந்தனையை வெளிப்படுத்த, பேச, அல்லது ஒரு பெரிய மேடையில் செயல்பட வாய்ப்பு கிடைப்பதில்லை. எனவே மாணவர்கள் இவ்வளவு நாட்கள் கற்றுக்கொண்டதை ஒரு மேடையில் தன்னம்பிக்கை உடன் சோதனை செய்ய, நிஜ உலக அனுபவத்தை பெற தேசிய அளவில் ஒரு வாய்ப்பை வழங்குவதற்காகவே இப்போட்டிகள் உருவாக்கப்பட்டது,” என்று கூறினார்.

