மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
![]()
திருவள்ளூர் மாவட்டம்
மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான விழிப்புணர்வு குறும்பட பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் உதவி இயக்குநர் (வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்) விஜயா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

