பூஜையில் அணைந்த தீபம் மீண்டும் எரிந்த அதிசயம்
![]()
கோவை
பூஜையில் அணைந்த தீபம்-பிரம்மரஷியின் கை அசைவில் மீண்டும் எரிந்த அதிசயம், கோவை நவக்கரை அருகே உள்ள ஆனந்த வேதாஸ்ரம் பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற குபேர யாக பூஜையில் பக்தர்கள் முன்னால் நடந்த வினோதம்
கோவையில் தமிழக-கேரள எல்லை பகுதியான நவக்கரை அருகே புதுப்பதி எனும் மலை கிராமத்தில் ஆனந்த வேதாஷ்ரம் செயல்பட்டு வருகிறது..
இதே வளாகத்தில் பிரசித்தி பெற்ற சிவன் கோவிலான பசுபதீஸ்வரர் ஆலயத்தில் தினந்தோறும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில்,ஆனந்த வேதாஷ்ரமத்தின் குரு பகவான் பிரம்மரிஷி தலைமையில்,சிவன் கோவில் வளாகத்தில் மஹா குபேர லட்சுமி யாகம் இன்று நடைபெற்றது..
சிவனடியார்கள் வேதமந்திரம் ஓத யாக பூஜைகள் நடைபெற்று கொண்டிருந்த போது,கோவில் கர்ப்பகிரக வளாகத்தில் இருந்த தீபம் அணைந்தது…
பூஜையின் நடுவே இதனை கண்ட பிரம்மரிஷி தனது கைகளை அசைக்க மீண்டும் தீபம் எரிய துவங்கியது..
இதனை கண்ட பக்தர்கள் பரவமடைய மீண்டும் தீபத்தை கை அசைவில் எரிய செய்தார்..
இந்நிலையில் கிராம மக்களிடையே இது குறித்த தகவல் தீயாய் பரவ கோவில் வளாகத்தில் பக்தர்கள் திரண்டு யாக பூஜையில் கலந்து கொண்டனர்..கையை அசைத்து தீபத்தை எரிய செய்த ஆனந்த வேதாஷ்ரம பிரம்ம ரிஷியிடம் மக்கள் ஆசி பெற்று வணங்கி சென்றனர்..
இந்த விநோத சம்பவம் பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தி உள்ளது குறிப்பிடதக்கது..

