கோவை மருத்துவ பரிசோதனை முகாம்
![]()
கோவை
எல்சி மருத்துவ அறக்கட்டளை சார்பாக இலவச எண்டோஸ்கோபி முகாம், 50 வது இலவச முகாமாக நடைபெற்ற இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.
கோவை எல்சி மருத்துவ அறக்கட்டளை,சார்பாக தொடர்ந்து இலவச எண்டோஸ்கோபி பரிசோதனை முகாம் நடைபெற்று வருகிறது..
இந்நிலையில் ஐம்பதாவது இலவச எண்டோஸ்கோபி மருத்துவ முகாம் இரத்தினபுரி லாலா மகால் அரங்கில் நடைபெற்றது..
பல்சமய நல்லுறவு இயக்கத்துடன் இணைந்து நடைபெற்ற இதில், இலவச எண்டோஸ்கோபி பரிசோதனை, வயிறு மற்றும் மகளிர் நலம் முகாமில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர்..
முன்னதாக முகாமின் துவக்க விழா எல்.சி.மருத்துவமனையின் இயக்குனர்கள் டாக்டர் ராஜன் மற்றும் வித்யா ராஜன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இதல் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகம்மது ரபி மற்றும் பேரூர் ஆதினம் தவத்திரு மருதாசல அடிகளார் ஆகியோர் கலந்து கொண்டு மருத்திவ முகாதை துவக்கி வைத்தனர்..
முகாமில் டாக்டர் ராஜன் தலைமையில் 30 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் இரைப்பை மற்றும் மகளிர் நோய் பிரச்சினைகளுக்கும் இலவச ஆலோசனைகளை வழங்கினர். துவக்க விழாவில்,தி.மு.க.மாணவரணி செயலாளர் ராஜிவ் காந்தி,பங்கு தந்தை ஜோசப் தன்ராஜ்,மற்றும் எஸ்.ஏ.பஷீர், கோட்டை செல்லப்பா,டோனி சிங்,முகம்மது அலி,காமராஜ்,சந்திரசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்..

