திருவள்ளூரில்20 ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்
![]()
திருவள்ளூர் டிச 15 : திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 20.12.2025 சனிக்கிழமை அன்று ஆவடி, சத்தியமூர்த்தி நகர், அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான 10,000-க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களை நிரப்ப உள்ளனர்.முகாமில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தை சார்ந்த முன்னணி 150-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர். இவ்வேலைவாய்ப்பு முகாமில் 8-ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் டிப்ளமோ, பொறியியல், நர்சிங் படித்தவர்கள் கலந்து கொண்டு தனியார் துறையில் பல்வேறு வகையான வேலைவாய்ப்பினை பெற்று பயன்பெறலாம்.
இம்மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் www.tnprivatejobs.tn.gov.in
விருப்பமும், தகுதியும் உள்ள வேலைநாடும் இளைஞர்கள் இம்முகாமில் அதிக அளவில் கலந்து கொண்டு, தனியார் துறையில் வேலைவாய்ப்பை பெற்று பயன் பெறுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

