அங்கன்வாடி ஊழியர்கள் கூட்டமைப்பு சாலை மறியல்
![]()
திருவள்ளூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அங்கன்வாடி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் சாலை மறியல் :100 பேர் கைது :
திருவள்ளூர் டிச 11 : திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி நுழைவு வாயில் முன்பு பணி நிரந்தரம் செய்தல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அங்கன்வாடி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் புஷ்பராணி தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் லதா முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் உமாராணி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சந்திரசேகர், மாநில துணைத் தலைவர் லூர்துசாமி ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தனர்.
அப்போது, அங்கன்வாடியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஓய்வூதியத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், ஆண்டுக்கு ஒரு முறை கோடைகால ஒரு மாத விடுப்பு வழங்கவும் என்பன உள்பட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு அங்கன்வாடி பணியாளர்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அதைத் தொடர்ந்து, சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் 100 க்கும் மேற்பட்ட பணியாளர்களை கைது செய்து தனியார் அரங்கத்தில் வைத்து, தொடர்ந்து மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

