திருபாச்சூரில் பி.ஆர்.அம்பேத்கர் நினைவு தினம்

Loading

திருபாச்சூரில் பி.ஆர்.அம்பேத்கர் நினைவு தினத்தை யொட்டி 2034 பயனாளிகளுக்கு ரூ.21.90 கோடி மதிப்பில் பல்வேறு துறை சார்ந்த நலத்திட்டங்கள் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் வழங்கினார் :
திருவள்ளூர் டிச 09 : சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகம் அரங்கில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், கல்வி, சுயதொழில் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய நிகழ்வு காணொலி வாயிலாக மின்னனு திரையில் நேரலையில் திரையிடப்பட்டதை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பொது மக்களுடன் அமர்ந்து பார்வையிட்டனர்.
அதனைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் திருபாச்சூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பி.ஆர்.அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி ஆதிதிராவிடர்  மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தாட்கோ, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, வேளாண்மைத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மகளிர் திட்டம், வருவாய் துறை, முன்னோடி வங்கி, ஊரக வளர்ச்சித் துறை, கூட்டுறவு துறை, மாவட்ட தொழில் மையம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை,  தமிழ்நாடு மின்சார வாரியம் ஆகிய துறைகள் சார்பில் 2034 பயனாளிகளுக்கு ரூ.21.90 கோடி மதிப்பிலான பல்வேறு துறை சார்ந்த நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.இராஜேந்திரன் (திருவள்ளூர்), ஆ.கிருஷ்ணசாமி (பூவிருந்தவல்லி), எஸ்.சந்திரன் (திருத்தணி),டி.ஜே.கோவிந்தராஜ் (கும்மிடிப்பூண்டி),துரை சந்திரசேகர் (பொன்னேரி) ஆகியோர் வழங்கினர்.
முன்னதாக 2034 பயனாளிகளுக்கு ரூ.21.90 கோடி மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரம், பட்டா, கல்விக்கடன், சுய தொழில் கடன், மகளிர் சுய உதவிக்குழு  வங்கி கடன் இணைப்பு, இயற்கை பேரிடர், இறப்பு நிவாரணம் ஆகிய நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. இறுதியில் 750 நபர்களுக்கு சமத்துவ உணவு பரிமாறப்பட்டது.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சு.சுரேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரும் இணை இயக்குநருமான வை.ஜெயக்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் செந்தில், திருவள்ளூர்  நகர்மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0Shares