அடிப்படைவசதிபுகாருக்குமத்திய பஞ்சாயத்துராஜ்தீர்வு
![]()
தமிழகத்தில் அடிப்படை வசதிகள் தொடர்பான புகார்களுக்கு மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தால் தீர்வு காணப்பட்டுள்ளது
PIB Chennai
தமிழகத்தில் சேர்வைக்காரன்மடம் பஞ்சாயத்துப் பகுதியில், தெருக்களில் கழிவுநீரைக் கொட்டி அப்பகுதிகளில் வசித்து வரும் மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருவது குறித்து திருமதி எம்மிமல் ரவிக்கு எதிராக, சேர்வைக்காரன்மடம் பஞ்சாயத்து அலுவலக எழுத்தர் திருமதி மாரியம்மாளிடம் 17.06.2025 அன்று புகார் மனு அளிக்கப்பட்டது. இதனையடுத்து, இந்தப் புகாரின் பேரில், புதுக்கோட்டை தொகுதி அதிகாரி ஆய்வு மேற்கொண்டு, உறிஞ்சும் குழி மற்றும் கழிவுநீர் குழி அமைப்பதற்கான வழிமுறைகள் மற்றும் அதற்கான உத்தரவுகளை பிறப்பித்தார். மேலும் இது தொடர்பாக ஏராளமான புகார்கள் தெரிவித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தப் பிரச்சினை தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு கோரி பிரதமர் அலுவலகத்திற்கு 03-10-2025 அன்று வந்துள்ள புகாரின் அடிப்படையில், தூத்துக்குடி தொகுதி மேம்பாட்டு அதிகாரியால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 09-10-2025 அன்று கழிவு நீர் உறிஞ்சுகுழி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகள் ஒருவார காலத்திற்குள் நிறைவடையும் என்றும் மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதேபோல், தமிழகத்தில், கொடைக்கானல் பஞ்சாயத்து அமைப்பின் கீழ் உள்ள வில்பட்டி பஞ்சாயத்தில், குறிப்பாக அண்ணா ராமசாமி நகரிலிருந்து (கொடைக்கானல் நகராட்சி மற்றும் வில்பட்டி பஞ்சாயத்தின் எல்லையில்) குருசுட்டி மெட்டு வரையிலான சாலையிலும், அதற்கு அப்பாலும், குப்பைகளை சேகரிக்காமல் புறக்கணிக்கப்பட்டு வரும் நிலை குறித்து சென்னையைச் சேர்ந்த திரு விபின் சச்தேவ் 12-10-2025 அன்று அளித்துள்ள புகாரின் பேரில், மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அப்பகுதியில் இருந்து 23-10-2025 அன்று குப்பைகள் அகற்றப்பட்டு, அப்பகுதி மக்களின் குறைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

