பின்தங்கியமாணவர்களுக்கான வேலைவாய்ப்பு திட்டம்

Loading

அழகப்பா பல்கலையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு திட்டம்.
காரைக்குடி டிசம்பர் 5.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துறைகள், கல்வியியல் மற்றும் உடற்கல்வியியல் கல்லூரிகளில் பயிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கான கற்றலின் போது ஊதியம் பெரும் பகுதி நேர வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் (Earn While You Learn Scheme 2025-26) மொத்தம் 94 மாணவ, மாணவியருக்கு பகுதி நேர பணிக்கான ஆணையை பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா.க.ரவி அவர்கள்  (02.12.2025) அன்று மைய நூலக கருத்தரங்க கூடத்தில் நடந்த நிகழ்வில் நேரில் வழங்கினார்.
இது குறித்து துணைவேந்தர் தெரிவித்ததாவது: அழகப்பா பல்கலைக்கழகத்தில் மொத்தம் 45 துறைகள் மற்றும் இரண்டு உறுப்பு கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் ஒரு துறைக்கு 2 மாணவர்கள் வீதம் மொத்தம் 94 மாணவர்கள் இத்திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டனர். துறைத்தலைவர்கள், புல முதன்மையர்கள், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாணவர் நல முதன்மையர் ஆகியோர் அடங்கிய குழு இத்திட்டத்திற்கான மாணவர்களை உரிய நெறிமுறைகளை பின்பற்றி தேர்வு செய்தனர். தெரிவு செய்யப்பட்ட 94 மாணவர்களுக்கும் மாதம் ஒன்றிற்கு ரூபாய் இரண்டாயிரம் உதவித்தொகையாக வழங்கப்படும். அழகப்பா பல்கலைக்கழக ஆராய்ச்சி நிதியிலிருந்து இதற்கான செலவினம் மேற்கொள்ளபடும். இந்த உதவித்தொகை டிசம்பர் 2025 மாதம் தொடங்கி மார்ச் 2026 வரை 4 மாதங்களுக்கு வழங்கப்படும். மாணவர்கள் தங்களது அன்றாட வகுப்பு நேரம் தவிர ஒரு நாளைக்கு குறைந்தது 3 மணி நேரம் பணிசெய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட துறைத்தலைவரின் வழிகாட்டுதலின் Litg தங்களது பணிகளை இவர்கள் மேற்கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும் துணைவேந்தர் பேசியதாவது அழகப்பா பல்கலைக்கழகம் கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் நீட்டிப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக தொடர்ந்து செயல்பட்டு வருவதால் தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல்வேறு தரவரிசைகளை தொடர்ந்து பெற்று வருகிறது. இதனால் அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு தமிழ்நாடு மட்டுமன்றி பிற மாநிலங்களிலிருந்தும் மாணவர்கள் மிக ஆர்வமாக படிக்க வருகின்றனர். ஆசிரியர்கள் நலன், அலுவலர்கள் நலன் மற்றும் மாணவர்களின் நலன்களை பேனுவதில் அழகப்பா பல்கலைக்கழகம் சிறப்பாக செயல்படுகிறது. குறிப்பாக மாணவர்கள் படிப்பதற்கு ஏற்றவகையில் அனைத்து வசதிகளையும் அவர்களுக்கு செய்துதருவதில் அழகப்பா பல்கலைக்கழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் பேரா.வெ.பழனிச்சாமி பேரா.சு.ராசாராம் மற்றும் துறைத்தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். முன்னதாக நல முதன்மையர் பேரா.செ.வேதிராஜன் அனைவரையும் வரவேற்றார். முனைவர்.அ.செந்தில்ராஜன் நன்றி கூறினார்.
0Shares