கார்த்திகை தீபத்திருவிழா நண்பர்கள் குழு பாதுகாப்பு
![]()
திருவண்ணாமலை டிச. 2-
கார்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்பு பணியில் ஈடுபடும் மக்கள் நண்பர்கள் குழுவிற்கு எஸ்கேபி கல்வி குழுமம் சார்பில் தமிழ்நாடு சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி அவர்கள் 300 சீருடைகளை மாவட்ட தலைவர் ஏ.ஏ.ஆறுமுகம் அவர்களிடம் வழங்கினார்.
கார்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்பு பணியில் ஈடுபடும் மக்கள் நண்பர்கள் குழுவிற்கு எஸ்கேபி கல்வி குழுமம் சார்பில் தமிழ்நாடு சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி அவர்கள் 300 சீருடைகளை மாவட்ட தலைவர் ஏ.ஏ.ஆறுமுகம் அவர்களிடம் வழங்கினார்.
உலக புகழ்பெற்ற திருவண்ணாமலை 2025 கார்த்திகை தீப திருவிழாவில் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோவில் நிர்வாகம், மாவட்ட வனத்துறை நிர்வாகம், மாவட்ட காவல் துறைகளுடன் இணைந்து தீபத்திருவிழாவில் பாதுகாப்பு பணி ஆற்றி வருகிறார்கள்.
திருவண்ணாமலை மாவட்ட மக்கள் நண்பர்கள் குழு (திளிறி ) இளைஞர்கள் 300 பேருக்கு சீருடை திருவண்ணாமலை எஸ்கேபி கல்வி குழுமம் சார்பில் மக்கள் நண்பர்கள் குழு மாவட்ட தலைவர் ஏ.ஏ.ஆறுமுகம் அவர்களிடம் தமிழ்நாடு சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி அவர்கள் 300 சீருடைகளை வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்ட திளிறி 1999 ஆம் ஆண்டு முதல் கடந்த 26 ஆண்டுகளாக எந்தவொரு பிரதிபலனும் பாராமல் தொடர்ந்து சமூக சேவை பணி ஆற்றி வருகிறார்கள்.தொடர்ந்து சேவை பணி ஆற்றும் திளிறி இளைஞர்கள் மாணவ, மாணவிகளுக்கு கடந்த 2004 ஆண்டு முதல் தொடர்ந்து 21 ஆண்டுகளாக திருவண்ணாமலை எஸ்கேபி கல்வி குழுமம் சார்பில் சீருடைகளை வழங்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மக்கள் நண்பர்கள் குழு நகர துணை ஒருங்கிணைப்பாளர்கள் வி.செந்தில்குமார், வி.ஜோதிவெங்கடேசன், வழக்கறிஞர் வி.ஜோதிகா, எஸ்,சௌந்தர், எஸ்.அருண்குமார், பெ. சிஜித்., மு.சண்முகசுந்தரம், மு.வீரையன் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.

