குழந்தைத்திருமணம்இல்லாதஇந்தியாதேசியதீர்மானம்

Loading

குழந்தைத் திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்குவது ஒரு தேசிய தீர்மானம்

அன்னபூர்ணா தேவி

மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர்

 

நூறு கோடிக்கும் அதிகமான மக்களுக்கு அடித்தளமாகப் பெண்களும் குழந்தைகளும் இருக்கும் ஒரு நாட்டில், அவர்களுக்கு அதிகாரமளித்தல் வெறும் கொள்கைத் தேர்வு மட்டுமல்ல – அது இந்தியாவின் மாற்றத்திற்கான பாதையாகும். அரசின் துணிச்சலான, அசைக்க முடியாத தொலைநோக்குப் பார்வையுடன், 2030-ம் ஆண்டுக்குள் குழந்தைத்  திருமணத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தேசிய தீர்மானத்தை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளோம். இதனால் ஒவ்வொரு சிறுமியும் சிறுவனும் பாதுகாப்பாக வளரவும், தங்கள் கல்வியைத் தொடரவும், பெருமையுடனும் நம்பிக்கையுடனும் தங்கள் எதிர்காலத்தை வடிவமைக்கவும் முடியும். தொடக்கத்திலிருந்தே, ‘முழு அரசும் முழு சமூகமும்’ என்ற அணுகுமுறையை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். இந்த சவாலை கொள்கை மூலம் மட்டும் எதிர்கொள்ள முடியாது என்பதை உணர்ந்தோம்.

குழந்தைத் திருமணம் என்பது நமது நாட்டில் பல தலைமுறைகளாக வழக்கமாகக் கொண்ட மிகவும் ஆழமாக பதிந்த சவால்களில் ஒன்றாகும். இது பெரும்பாலும் கல்வி, செல்வாதாரங்கள் மற்றும் விழிப்புணர்வில் வரையறுக்கப்பட்ட அணுகலை எதிர்கொள்ளும் சமூகங்களில் நிலைநிறுத்தப்படுகிறது. தெளிவான கொள்கை வழிகாட்டுதல், நன்கு வடிவமைக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் நிர்வாகத்தில் சமூகங்களின் புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையுடன், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் முன்னணியில் உள்ளது; குழந்தைத் திருமணம் நீடிக்க வழிவகுத்த நிலைமைகளை அகற்றுகிறது.

2025-26-க்கு மட்டும் 1,827 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட, வருவாய் மற்றும் தகுதி அடிப்படையிலான தேசிய உதவித்தொகை திட்டம், குழந்தைத் திருமணத்தைத்  தொடர்ச்சியாக இயக்கும் அம்சங்களில்  ஒன்றான வறுமை காரணமாக எந்தக் குழந்தையும் பள்ளியை விட்டு வெளியேறாமல் இருப்பதை உறுதி செய்கிறது. இதற்கிடையே, பிரதமரின் வித்யாலட்சுமி திட்டம் உயர்கல்வியைத் தொடரும் இளம் பெண்களுக்கு முக்கியமான நிதி உதவியை வழங்குகிறது.

குழந்தைத் திருமணத் தடை அலுவலர்கள் இந்த நோக்கத்தின் முதுகெலும்பாக உருவெடுத்துள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும், நாடு முழுவதும் 37,000-க்கும் அதிகமான குழந்தைத் திருமண தடை அலுவலர்களை நியமித்து களப்பணியை வலுப்படுத்தியுள்ளோம். அங்கன்வாடி பணியாளர்களுக்கு திட்டத்தின் நோக்கங்கள் விளக்கப்படுவதால், குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு அழைத்து வரப்படுகிறார்கள். இதுவரை, 6,30,000-க்கும் அதிகமான பள்ளி செல்லாத பெண் குழந்தைகளை அடையாளம் கண்டு, அவர்களை மீண்டும் வகுப்பறைகளில் சேர்த்துள்ளோம்.

குழந்தைத் திருமணத்திற்கு எதிரான கூட்டுப் போராட்டத்தில் இந்தியா ஒரு தீர்க்கமான திருப்புமுனையை நெருங்கி வரும் நிலையில், ஒவ்வொரு குழந்தையையும் பாதுகாக்கவும், உலகளாவிய குழந்தைத் திருமண அச்சுறுத்தலை அவசரமாகவும் உறுதியாகவும் முடிவுக்குக் கொண்டுவரவும் நிர்வாகமும் சமூகமும் எவ்வாறு ஒன்றிணைந்து செயல்பட முடியும் என்பதற்கான ஒரு புதிய மாதிரியை உலகிற்கு நாம் வழங்குகிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தக் குழந்தைகள்தான் நாம் அனைவரும் உருவாக்க விரும்பும் வளர்ச்சியடைந்த இந்தியாவின்  முன்னோடிகள் மற்றும் உண்மையான ‘சாரதி’கள் ஆவர்.

0Shares