நீலகிரி மாவட்ட ஆட்சியர்129 மனுக்களை பெற்றார்
![]()
நீலகிரி
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நடைபெற்ற மக்கள் மாவட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள், பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கி 129 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று முடிந்த 4வது புத்தக திருவிழாவிற்கு நன்கொடை வழங்கிய உதகமண்டலம் கனரா வங்கி மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சதானந்த கல்கி மற்றும் இந்தியன் வங்கியின் மேலாளர் ஆகியோர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி, பாராட்டினார்.
மேலும், 2023-2024 ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் புதுமையான அறிவியல் கண்டுபிடிப்பிற்கான தேசிய அளவிலான தேர்வு 28.11.2025 அன்று தூத்துக்குடி நேஷனல் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் நீலகிரி மாவட்டம் உதகை வட்டம் பாக்யா நகர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 7 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவன் வினுகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டு, நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி பானை செய்யும் கருவியை கண்டுபிடித்ததற்காக, மாநில அளவில் முதலிடம் பிடித்து, “Inspire Award” விருது மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம நேரில் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
அதனை தொடர்ந்து, பொது நூலகதுறையில் சிறப்பாக பணியாற்றியமைக்காக, தமிழ்நாடு அரசின் டாக்டர் அரங்கநாதன் விருது பெற்ற நீலகிரி மாவட்டம் அதிகரட்டி கிளை நூலகர் திரு.பீ.ராஜசேகர் மற்றும் சிறந்த வாசகர் வட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட கோத்தகிரி கிளை நூலகத்திற்கு மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களால் விருது மற்றும் பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதனை இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில், பொது சுகாதாரத்துறையின் சார்பில் உலக எய்ட்ஸ் தினம் (டிசம்பர் 1ஆம் தேதி) யை முன்னிட்டு விழிப்புணர்வு உறுதி மொழியினை பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் ஏற்றுக் கொண்டனர்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.நாராயணன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கண்ணன் (கணக்குகள்). மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், மாவட்ட நேர்முக உதவியாளர் (நிலம்) பழனிச்சாமி, துணை இயக்குநர் (சுகாதார பணிகள்)சோமசுந்தரம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்
திருநாவுக்கரசு, மாவட்ட நூலக அலுவலர் கிளெமண்ட் மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

