16வது நீலகிரி கராத்தே சாம்பியன்ஷிப்2025ஐ நடத்தினர்

Loading

குயின் ஆஃப் ஹில்ஸ் டிஸ்டிரிட் ஸ்போர்ட்ஸ் கராத்தே-டூ அசோசியேஷன் தனது 16வது நீலகிரி கராத்தே சாம்பியன்ஷிப் 2025 ஐ
ஊட்டி அண்ணா உள்அரங்கிள்  மிக விமர்சையாக நடத்தினார்கள்.
          இப்போட்டியில் தனிநபர் கட்டா, தனிநபர் குமித்தே (சண்டைபிரிவு) ,டீம் கட்டா,ஆகிய மூன்று விதமான போட்டிகளில் 30-க்கும் மேற்பட்ட பிரிவுகள் நடத்தப்பட்டன.இப்போட்டியில் நீலகிரி மாவட்டம் முழுவதிலும் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கேற்று தங்களது தனித்திறமையை வெளிப்படுத்தினர்.
       குயின் ஆஃப் ஹில்ஸ் டிஸ்டிரிட் ஸ்போர்ட்ஸ் கராத்தே-டூ அசோசியேஷனின் தலைவர் சென்சாய் B.இணையத்துல்லா , செயளாலர் ரென்சி M.பழனிவேல் , துணைத் தலைவர்கள் சென்சாய்  J.அருண்குமார்  ,சென்சாய் S. பசுவையா பொருளாளர் சென்சாய் P.G. லிங்கராஜன்  மற்றும் சங்க உறுப்பினர்கள் சிறப்பாக நடத்தினர் .
        இப்போட்டிக்கு சிறப்பு விருந்தினராக திரு J.நவீன் குமார், துணை காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையேற்றார்.விருந்தினராக  நீலகிரி மெட்ரிகுலேஷன் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி.ஜான்சி ரீட்டா டோனி,M.A.,B.Ed., அவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கி வாழ்த்தினார்கள்.
           முன்னதாக அசோசியேஷனின் தலைவர் சென்சாய் B.இணையத்துல்லா வரவேற்றார்.முடிவில் அசோசியேஷனின் செயலாளர் ரென்சி M.பழனிவேல் நன்றி உரையாற்றினர்.இப்போட்டிக்கான ஏற்பாடுகளை குயின் ஆஃப் ஹில்ஸ் டிஸ்டிரிட் ஸ்போர்ட்ஸ் கராத்தே-டூ அசோசியேஷனின்  செயலாளர் ரென்சி M.பழனிவேல் மற்றும் உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
     இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் 04-01-2026 அன்று தமிழ் நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே-டூ அசோசியேஷன் நடத்தும் 43வது மாநில அளவிலான கராத்தே போட்டியில் கலந்து  கொள்ள தகுதி பெற்றுள்ளனர்.
0Shares