இராணிப்பேட்டை வாக்குஎண்ணும் மையங்களில்ஆய்வு
![]()
இராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ஜெ.யு சந்திரகலா இ.ஆ.ப., அவர்கள் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணும் மையங்களை ஆய்வு செய்தார்கள்.
எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026 முன்னிட்டு தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் அரசு செயலாளர் அவர்களின் அறிவுரையின்படி இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 038 அரக்கோணம், 039 சோளிங்கர், 041 இராணிப்பேட்டை மற்றும் 042 ஆற்காடு ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட உள்ள வாலாஜாபேட்டை அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மையத்தில் இராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ஜெ.யு. சந்திரகலா இ.ஆ.ப., அவர்கள் இன்று (28.11.2025) பார்வையிட்டு ஆய்வு செய்து கேட்டறிந்தார்கள். வாக்கு எண்ணும் மையத்திற்கு தேவைப்படும் பாதுகாப்பு அம்சங்கள் கருத்தில் கொண்டு செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு இதனை தொடர்ந்து அறிக்கை அளிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படும்.
இந்த ஆய்வின்பொழுது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.அய்மன் ஜமால் இ.கா.ப, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.தனலிங்கம், வருவாய் கோட்டாட்சியர் திரு.ராஜி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் திருமதி.திரிபுரசுந்தரி, வட்டாட்சியர்கள் திரு.ஆனந்தன், செல்வி.வசந்தி மற்றும் பலர் உள்ளனர்.
வெளியீடு. செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், இராணிப்பேட்டை மாவட்டம்.

