தேனி மாவட்டவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

Loading

தேனி மாவட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  மாவட்ட ஆட்சித்தலைவர்   திரு.ரஞ்ஜீத் சிங்  ..., அவர்கள் தலைமையில் நடைபெற்றது

 

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில்   (28.11.2025) அன்று நடைபெற்றது.

தேனி மாவட்டத்தின் இயல்பான ஆண்டு மழை அளவான 829.80 மி.மீ-க்கு நவம்பர் மாதம் வரை 856.44 மி.மீ பெய்துள்ளது. இது நவம்பர் மாதம் வரைஇயல்பான மழையளவான 773.60  மி.மீ-யை காட்டிலும் 82.84  மி.மீ அதிகமாகும். நவம்பர் மாத இயல்பு மழையளவான 146.50  மி.மீ-க்கு தற்பொழுது வரை 57.15  மி.மீ மழை பெய்துள்ளது. இது  நவம்பர் மாத இயல்பான மழை அளவை காட்டிலும்                   89.35   மி.மீ குறைவாகும்.

தேனி மாவட்டத்தில் நடப்பாண்டு நெல் 6,578  ஹெக்டரும், சிறுதானியம் 7,673 ஹெக்டரும், பயறு வகைகள் 5,390 ஹெக்டரும், எண்ணெய்வித்துகள் 1,408  ஹெக்டரும், பருத்தி 1,137 ஹெக்டரும், கரும்பு 1,937 ஹெக்டரும், தோட்டக்கலைத் துறை பயிர்களான பழப்பயிர்கள் 19,275 ஹெக்டரும் காய்கறி வகைப் பயிர்கள்   7,979 ஹெக்டரும், மலைத்தோட்ட பயிர்கள் 33,746  ஹெக்டரும், நறுமணப்பயிர்கள் 3,226 ஹெக்டரும், மலர்ப்பயிர்கள் 577 ஹெக்டர் பரப்பிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

வேளாண்மை விரிவாக்க மையங்களில் நெல்  விதை 68 மெ.டன், சிறுதானியங்கள்                       13.5  மெ.டன்னும்   (கம்பு கோ 10,  குதிரைவாலி MDU 1) பயறு வகை விதைகள் (தட்டை பயிறு, பாசிப்பயிறு மற்றும் உளுந்து) 22  மெ.டன்னும், எண்ணெய்வித்துப் பயிர் விதைகள் (நிலக்கடலை)                  8   மெ.டன்னும்,   பருத்தி 0.755   மெ.டன்னும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.  தேனி மாவட்டத்தில் நடப்பு பருவ சாகுபடிக்குத் தேவையான உரங்களான யூரியா 1253  மெ.டன்னும் (MFL, Spic & IFFCO), DAP 466 மெ.டன்னும் (Green star, IPL & IFFCO) பொட்டாஷ் 692 மெ.டன் (IPL) மற்றும் கலப்பு உரங்கள் 2744 மெ.டன்னும்  (Fact, GFL, CIL, IFFCO) தனியார் நிறுவனங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

 

வேளாண் அடுக்ககம் திட்டத்தில் வேளாண்மைத்துறை சார்ந்த அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு ஒவ்வொரு விவசாயிகளுக்கும் தனித்துவமான அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்தில் PM Kisan நிதியினை தொடர்ந்து பெறும் 27,320 பயனாளிகளில் இதுவரை 22,290 விவசாயிகள் மட்டுமே பதிவுகள் மேற்கொண்டுள்ளனர். இன்னும் ஆண்டிபட்டி வட்டத்தில்  1749 விவசாயிகளும், போடிநாயக்கனூர் வட்டத்தில்  498 விவசாயிகளும், பெரியகுளம் வட்டத்தில் 1027 விவசாயிகளும், தேனி வட்டத்தில் 428 விவசாயிகளும், உத்தமபாளையம் வட்டத்தில் 1328 விவசாயிகள் என மொத்தம் 5,030  பயனாளிகள் அடையாள எண் பெறவில்லை.   PM Kisan நிதியினை தொடர்ந்து பெற விரும்பும் விவசாயிகளும் உடனடியாக சம்பந்தப்பட்ட வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு பதிவுகள் மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

 

தேனி மாவட்டத்தில் வேளாண் படிப்பு முடித்தவர்களுக்கு சுய வேலைவாய்ப்புகள் உருவாக்கவும் வேலையில்லா வேளாண் பட்டதாரிகள் மற்றும் பட்டயதாரர்களுக்கு நிலையான வருமானத்தை உருவாக்கவும், 31 “முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள்” உருவாக்கப்பட உள்ளன. இதன் மூலம் விவசாயிகளுக்கு தரமான இடுபொருள்கள், இயற்கை வேளாண் இடு பொருட்கள், நியாயமான விலையில் விற்பனை செய்வதோடு, விவசாயிகளுக்குத் தேவைப்படும் தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்குதல், வாடகைக்கு பண்ணை இயந்திரங்களை வழங்குதல், சந்தை நிலவரம் ஆகியவைகள்  குறித்த தகவல்கள் ஒரே இடத்தில் வழங்கப்படும். மேலும் விவசாயிகள் வேளாண் விளைபொருள்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்வதற்கும் உதவி செய்யப்படும். இதற்கென ஒவ்வொரு மையத்திற்கும் தலா ரூ.3 இலட்சம் முதல் ரூ.6 இலட்சம் வரை மானியம் வழங்கப்படவுள்ளது. மேலும் விபரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்  அலுவலகத்தை அணுகவும்.

விவசாயிகளால் வைக்கப்பட்ட கோரிக்கைக்கு சம்மந்தப்பட்ட துறைகள் மூலம் உரிய நடவடிக்கைள் எடுக்கப்பட்டு விவசாயிகளுக்கு உரிய பதில்கள் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

 

அதனைத் தொடர்ந்து, தோட்டக்கலைத்துறையின் சார்பில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை தொடர்பான துண்டு பிரசுரம் மற்றும் ராபி பருவ தோட்டக்கலை பயிர்களுக்கான பயிர்காப்பீடு  துண்டு பிரசுரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

 

பின்னர், மீன்வளத்துறையின் சார்பில்,  பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மீன் வளர்ப்பு குளங்கள் அமைப்பதற்கு உள்ளீட்டு மானியத்திற்கான ஆணையினை     2 பயனாளிகளுக்கு  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

 

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ராஜகுமார்,   மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை)  திருமதி வளர்மதி,   கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்  திருமதி நர்மதா,   உதவி வனப்பாதுகாவலர் திரு.சாய்சரண் ரெட்டி, இ.வ.ப., மற்றும் அனைத்துத் துறை மாவட்ட அளவிலான அலுவலர்கள் மற்றும் ஏராளமான விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

 

வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தேனி.

0Shares