திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு
![]()
திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் குழந்தைகளுடன் கலந்துரையாடினார் :
திருவள்ளூர் நவ 29 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் நடைபெற்ற காபி வித் கலெக்டர் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.
இதனைத்தொடர்ந்து, அன்பு கரங்கள் திட்டத்தின் கீழ் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகள், கைவிடப்பட்ட குழந்தைகள், ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து மற்றொரு பெற்றோர் மாற்றுத்திறனாளி கொண்டிருந்தால் மற்றொரு பெற்றோர் சிறையில் இருந்தால், மற்றொரு பெற்றோர் உயிருக்கு ஆபத்தான நோய்களுடன் வாழ்ந்து வந்தால்) திட்டத்தின் கீழ் நிதி ஆதரவு பயன் பெறும் 35 குழந்தைகளுக்கும் மற்றும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உடல் நலம் மற்றும் உடல் மற்றும் மனநல மருத்துவ முகாம் நடைபெற்றது.
இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நிஷாந்தினி, நன்னடத்தை அலுவலர் சுதா, குழந்தைகள் நல குழு தலைவர் தென்பாண்டியன் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

