திருவள்ளூரில் சில நாட்களாக பெய்த மழையால் சேதம்

Loading

திருவள்ளூர் மாவட்ட தலைநகரான திருவள்ளூரில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் சேதமடைந்த சாலைகளால் வாகன ஓட்டிகள் அவதி. பள்ளி, வேலைக்கு செல்பவர்கள், வாகன ஓட்டிகள் அவதி :
திருவள்ளூர் நவ 28 : திருவள்ளூர் மாவட்ட தலைநகரான திருவள்ளூரில் கடந்த சில நாட்களாக பெய்த வட கிழக்கு பருவ மழையால் இங்குள்ள சாலைகள் பெரும்பாலும்   சேதமடைந்தது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல முடியாத நிலை உள்ளது.  இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் குழந்தைகளை பள்ளிக்கு ஏற்றிச் செல்லும் போது விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
அதிலும் குறிப்பாக வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், நகராட்சி அலுவலகம்  எதிரில், பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் போது சேதமடைந்த சாலைகளை சீரமைக்க பொதுமக்கள் தொடர்ந்து  மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தால் திருவள்ளூர் பகுதி வாழ் மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, மாவட்ட கலெக்டர் திருவள்ளூர் நகரின் மையப் பகுதியும்,  முக்கிய சாலையான ஜெ.என்.சாலையில் சேதமடைந்த சாலையை சீரமைக்காமல் தடுப்பு அமைத்திருப்பதால் வாகனங்கள் அதிகளவில் வரும் போது விபத்துகள் எற்படும் அபாயம் உள்ளது. எனவே நகராட்சி அலுவலகம் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே சேதமடைந்து அதனால் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க  மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென புொது மக்கள், வாகன ஓட்டிகள், பள்ளி மாணவிகள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.
0Shares