உதயநிதி பிறந்தநாள் புதுச்சேரியில் அன்னதானம்
![]()
புதுச்சேரி நவ-27
தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் புதுச்சேரியில் அன்னதானம் நலத்திட்ட உதவிகள். ஆர்.சிவா, அனிபால் கென்னடி பங்கேற்பு
தமிழ்நாடு துணை முதலவர் மற்றும் திமுக இளைஞர் அணி செயலாளர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, புதுச்சேரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் திமுக சார்பில் அன்னதானம், நலத்திட்ட உதவிகள், ரத்ததான முகாம்கள் உள்ளிட்ட சமூக சேவைகள் சிறப்பாக நடத்தப்பட்டன.
இதன் ஒரு பகுதியாக, மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் அகிலன் ஏற்பாட்டில், ரத்ததான முகாம் பத்துக்கண்ணு லட்சுமிநாராயணா மருத்துவமனையில் நடைபெற்றது. மாநில இளைஞர் அணி அமைப்பாளர் எல். சம்பத் எம்.எல்.ஏ. முன்னிலையில் நடைபெற்ற இம்முகாமை, மாநில கழக அமைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் தொடங்கி வைத்தார்.
ஊசுடு தொகுதி செயலாளர் இளஞ்செழியப்பாண்டியன் வரவேற்று பேசினார்.
தொடர்ந்து, மண்ணாடிப்பட்டு தொகுதிக்குட்பட்ட காட்டேரிக்குப்பம் கிராமத்தில் ஏழை, எளியோருக்கான நலத்திட்ட உதவிகள் மற்றும் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிகளில் மாநில அவைத்தலைவர் எஸ்.பி. சிவக்குமார், மாநில துணை அமைப்பாளர் வி. அனிபால் கென்னடி, எம்.எல்.ஏ., பொருளாளர் இரா. செந்தில்குமார், எம்.எல்.ஏ., தலைமைச் செயற்குழு உறுப்பினர் லோகையன், பொதுக்குழு உறுப்பினர்கள் டி. செந்தில்வேலன், அமுதாகுமார், தட்டாஞ்சாவடி தொகுதி பொறுப்பாளர் டாக்டர் நித்திஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பிற்பகலில், சின்ன காலாபட்டு சாந்தி பவன் அதரவற்ற முதியோர் இல்லத்தில் மாநில மீனவர் அணி அமைப்பாளர் கோதண்டம் ஏற்பாட்டில் சிக்கன் பிரியாணி மற்றும் முட்டை அன்னதானமாக வழங்கப்பட்டது. மாநில துணை அமைப்பாளர், உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. அனிபால் கென்னடி அவர்கள் தலைமையில் நிகழ்ச்சி துவங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, கிளை செயலாளர் ராகேஷ், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
துணை முதலவரின் பிறந்தநாளை முன்னிட்டு சமூக நலனைக் கருத்தில் கொண்டு நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சிகள் பொதுமக்களின் பாராட்டைப் பெற்றன.

