198 வீடு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்
![]()
திருவள்ளூர்
198 வீடு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம் பெத்திகுப்பம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 198 வீடுகளின் கட்டுமான பணிகள், சாலை வசதிகள், மழைநீர் வடிகால்வாய்கள் உள்ளிட்ட பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் மற்றும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இதில் செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி) ராஜவேல், உதவி செயற்பொறியாளர் கஜலட்சுமி, மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

