விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
![]()
நீலகிரி
நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள். கூடலூர் வட்டார விவசாயிகளுக்கு தேசிய வேளாண் சந்தை (e-NAM) குறித்த விழிப்புணர்வு மற்றும் பயிற்சி கூட்டம் நடத்து மாறும் வேளாண் வணிகத் துறைக்கு அலுவலர்களுக்கும். வேளாண் பொறியியல் துறையினை இ- வாடகை திட்டம் குறித்து பயன்பெறும் வகையில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், வன விலங்கு தொடர்பான புகார்கள் இருப்பின், பொதுமக்கள் எளிதாக புகார்கள் அளிக்கும் வகையில், அனைத்து நியாய விலைக் கடைகளிலும் அந்தந்த பகுதியை சார்ந்த வன அலுவலர்கள் விவரம் மற்றும் உதவிக்கு அழைப்பதற்கான தொலைப்பேசி எண்கள் விவரம் வைக்குமாறும்.. கோத்தகிரி வட்டாரத்தில் உழவர் சந்தை ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு விவசாயிகள் தரப்பில் நன்றி தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறித்தினார்.கூறினார். அதற்கான பணிகள் விரைவில் மேற்கொள்ளுமாறும் மாவட்ட
மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்வதற்காக. வழங்கப்பட்ட கணக்கீட்டு படிவங்களை விவசாயிகள் பூர்த்தி செய்து விரைவில் அந்தந்த வாக்குசாவடி நிலை அலுவலர்களிடம் (BLO) வழங்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டு, விவசாயம் தொடர்பான அனைத்து கோரிக்கைக்களுக்கும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் உதவி வன பாதுகாவலர் துஸ்கர் ஸ்ரீஹரி ஷிண்டே இ.வ.ப., அவர்கள், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர்
சித்ரா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் நவநீதா மற்றும் விவசாயிகள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

