ஏற்றுமதியாளர்கள் பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டம்

Loading

பத்திரிகை தகவல் அலுவலகம்
இந்திய
 அரசு
சென்னை

இந்திய கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் சங்க உறுப்பினார்களுக்கு பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது

புதுதில்லி, நவம்பர் 20, 2025

இந்திய கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் சங்க உறுப்பினார்களுக்கு பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டம் சங்கத்தின் (கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம்) உறுப்பினார்களுக்கு பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை  ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) நவம்பர் 18, 2025 அன்று சென்னையில் நடத்தியது.

சென்னை மற்றும் புதுச்சேரி மண்டல அலுவலகத்தின் பிராந்திய வருங்கால வைப்பு நிதி ஆணையர் திரு ரஞ்சய் மூஷஹரி தலைமையில் இந்த அமர்வு நடைபெற்றது, அவர்  பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டத்தின் நோக்கங்கள், நன்மைகள் மற்றும் செயல்படுத்தல் கட்டமைப்பை விளக்கினார். ஏற்றுமதித் துறையில் உள்ள நிறுவனங்களிடையே சமூகப் பாதுகாப்பு உள்ளடக்கத்தை மேம்படுத்துவதிலும் இணக்கத்தை ஊக்குவிப்பதிலும் இந்தத் திட்டத்தின் பங்கை அவர் எடுத்துரைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் இணை இயக்குநர் திரு ஜெயபால் கலந்து கொண்டார். அவர் இபிஎஃப்ஓ-ன் தொலைநோக்கு முயற்சிகளைப் பாராட்டினார். மேலும் கடல்சார் பொருட்கள் துறையுடன் தொடர்புடைய பங்குதாரர்களுக்கு சமூகப் பாதுகாப்பின் நன்மைகளை விரிவுபடுத்துவதில் ஆதரவை உறுதி செய்தார்.

0Shares