சிறுத்தை நடமாட்டம் சிசிடிவி காட்சி பதிவு

Loading

குன்னூர்

குன்னூர் உபாசி வளாகத்தில் சிறுத்தை நடமாட்டம் சிசிடிவி காட்சி பதிவு

குன்னூர்  அருகே உபாசி வளாகத்தில் சிறுத்தை ஒன்று நேற்று வெகு நேரம் சுற்றி திரிந்தது கேமராவில் பதிவாகி குடியிருப்புவாசிகளை மிருந்த அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. குன்னூர் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள உபாசி வளாகத்தில், 40 அலுவலர்கள், ஊழியர்கள் குடியிருந்து வருகிறார்கள். மேலும் உபாசி வளாகத்தை சுற்றி ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். பொதுமக்கள் காலை மற்றும்  மாலை வேளைகளில் நடை பயிற்சி செய்ய உபாசி வளாகத்தை ஒட்டியுள்ள சாலையை பயன்படுத்தி வருகின்றனர். ஏராளமான பள்ளி  செல்லும் குழந்தைகள் இங்கு உள்ளனர்.
இந்நிலையில்  உபாசி வளாகத்தில்  வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.  சில நாட்களாகவே கரடி ஒன்று உபாசி வளாகத்தில்  அங்குல உள்ள அலுவலர்களின் குடியிருப்பு கதவுகளை உடைத்து பொருட்களை நாசம் செய்வது தொடர்கதையாக உள்ளது. வனத்துறை கரடியை பிடிக்க கூண்டு வைத்தும் அதை பிடிக்க முடியவில்லை.   காட்டெருமை மற்றும் முள்ளம்பன்றி ஆகியவை அதிகளவில் இந்தப்பகுதியில் சுற்றி திரிகின்றன. இந்நிலையில் சிறுத்தை உபாசி வளாகத்தில் சுற்றி திரிவது, பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வனத்துறை துரித நடவடிக்கை எடுத்து  அசம்பாவிதங்கள் ஏதும் நிகழவும் முன், கரடி மற்றும்  சிறுத்தையை பிடிக்க பொதுமக்கள்  கோரிக்கை வைத்துள்ளனர். – உபாசி செய்திக்குறிப்பு
0Shares