காப்பீடு அட்டை வழங்க அதிகாரி மறுப்பு
![]()
செங்குன்றத்தில் தள்ளுவண்டியில் பழ வியாபாரி இரண்டு லட்சம் ரூபாய் வருமான வரி கட்டுவதாக குடும்ப அட்டையில் காட்டுவதால் காப்பீட்டு அட்டை கேட்டு விண்ணப்பித்தாலும் வழங்க மறுப்பதாகவும் கூறி மாவட்ட ஆட்சியரிடம் புகார் :
திருவள்ளூர் நவ 20 : திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாலவாயல் கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாகரன் (65). பல வியாபாரியானஇவர் தனது மனைவியுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ரேஷன் கடையில் அரிசி வழங்க மறுப்பதாகவும் 2 லட்சம் ரூபாய் வரி கட்டுவதாக குடும்ப அட்டையில் ஆய்வு செய்தபோது காட்டுவதாகவும் அதனால் வழங்க மறுப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் வயது மூப்பு காரணமாக மருத்துவமனைக்கு செல்ல ஏதுவாக காப்பீடு அட்டை கேட்டு விண்ணப்பித்தாலும் இதே காரணத்தை சொல்லி தர மறுப்பதாகவும் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து பழ வியாபாரி கருணாகரன் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்று அளித்தார்.
காலம் காலமாக பழம் வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வரும் நிலையில் மழைக்காலங்களில் அதையும் செய்ய முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வரும் நிலையில் கடந்த சில மாதங்களாக ரேஷன் கடையில் அரிசி போன்ற அத்தியாவசிய பொருட்கள் எதையும் வழங்க மறுப்பதாகவும், இரண்டு லட்சம் வருமான வரி செலுத்துவதாக குடும்ப அட்டையில் ஆய்வு செய்தபோது தெரிவதாகவும், அதனால் அத்தியாவசிய உணவு பொருட்களை வழங்க மறுப்பதாகவும் கூறினார்.
மேலும் வயது மூப்பு காரணமாக மருத்துவமனைக்கு செல்ல ஏதுவாக மருத்துவ காப்பீட்டு அட்டை கேட்டு விண்ணப்பித்தாலும் இதே காரணத்தை கூறி தர மறுப்பதாகவும் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கருணாகரன் தனது மனைவியுடன் நேரில் வந்து புகார் மனு ஒன்றை அளித்தார். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

