கோவைவிழாவில் பெண்களுக்கு தையல் இயந்திரம்
![]()
கோவை
சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற விழாவில் பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டது
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பிறந்தநாள் விழா கோவையில் நடைபெற்றது..
இளைஞர் காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப் பாளர் ஹரிஹரசுதன் தலைமையில் நடைபெற்ற இதில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னால் சட்டமன்ற உறுப்பினரும் ஆன எம்.என்.கந்தசாமி,காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் விஜயகுமார், ரங்கராஜ் காங்கிரஸ் சிறுபான்மை துறை மாநில தலைவர் முகம்மது ஆரீஃப் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்..
சர்வ மத பிரார்த்தனையாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முன்னதாக ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சாரதாம்பாள் கோவிலி்ல் சிறப்பு பூஜை நடைபெற்றது..
தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது..
விழாவில் ஒரு பகுதியாக நலிவுற்ற இரண்டு ஏழை குடும்ப பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டது..

