அனைத்துசமூகமக்களுக்கு உதவும்பேரவை கவனஈர்ப்பு
![]()
கோவை
கோவை பந்தயசாலையில் உள்ள தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவை அமைப்பின் சார்பாக, பட்டியல் வெளியேற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..
தமிழகத்தில் ஒன்றே முக்கால் கோடி பேர், தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சார்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் இதுவரை எஸ். சி இன பட்டியலில் உள்ளனர். எங்களுக்கு எஸ்சி இன சலுகைகள் வேண்டாம், எனவும் எஸ்இ பட்டியலில் இருந்து எங்களை வெளியேற்ற கூறி கடந்த 40 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தியும், சம்பந்த பட்ட அதிகாரிகளிடமும்,அரசிடமும் மனு அளித்து வருகின்றோம். ஆனால் இது வரை எந்த வித நடவடிக்கையும் அரசு எடுக்க வில்லை என்பதை கன்டித்தும், எஸ்இ பட்டியலில் இருந்து எங்களை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கோவை பந்தயசாலையில் உள்ள தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கன்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவை அமைப்பின் நிறுவன தலைவரும் வழக்கறிஞருமான புஸ்பாணந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தேவேந்திர மடாலயத்தில் இருந்து, ராஜதேவேந்திர சுவாமிகள், இந்திரன் இதழ் ஆசிரியர் உலகநாதன், அசோக் பண்ணாடி, டாஸ்மாக் தொழிற்சங்க தலைவர் மணிமாறன், பிரபுகுமார் பட்டக்காரர், தெய்வராஜ் பட்டக்காரர், சந்திரன் தேவேந்திரன், சுந்தர்ராஜ் தேவேந்திரன், கலைச்செல்வன், மாணிக்கம் மள்ளர், நாம் தமிழர் கட்சி நர்மதா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

