ஏழை எளிய மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவி
![]()
சேலம்
வ.உ.சி. 154வது பிறந்தநாளை முன்னிட்டு ஏழை எளிய மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா.
சேலம் நவம்பர்.10
சேலம், தாதகாப்பட்டியில் அமைந்துள்ள வ.உ.சி அரங்கத்தில் சோழிய வேளாளர் சங்கத்தின் முப்பெரும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. பொன்னுசாமி அறக்கட்டளை சார்பில் ஏழை எளிய மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப், ஊக்கத்தொகை மற்றும் காது கேளாதோர்க்கு காதுதொலி கருவி ஆகியவற்றை தலைவர் சதீஷ்குமார், மாமன்ற உறுப்பினர் தனலட்சுமி ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் அன்புமணி, தங்கவேல், திருநாவுக்கரசு, அசோக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

