ஊராட்சி செயலாளர்களுக்கு வட்டாரபுத்தாக்கப்பயிற்சி

Loading

திருவள்ளூர் நவ 09 :
திருவள்ளூரில் ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் அனைத்து கிராம ஊராட்சி செயலாளர்களுக்கான வட்டார அளவில் புத்தாக்கப் பயிற்சி :

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் அனைத்து கிராம ஊராட்சி செயலாளர்களுக்கான வட்டார அளவில் புத்தாக்கப் பயிற்சி நடைபெற்றது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரும் இணை இயக்குநருமான வை.ஜெயகுமார் தலைமை தாங்கினார்.

இதில் ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர்  ராஜவேல், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) யுவராஜ், உதவி திட்ட அலுவலர் (வீடுகள்)  முத்துசுந்தரம், உதவி திட்ட அலுவலர் (ஊதியம் மற்றும் வேலை)  பரிமளா, எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் மணிசேகர், கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர்  சந்திரசேகர், கடம்பத்தூர் பரிமளா, மற்றும் திருவாலங்காடு, எல்லாபுரம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0Shares