ஜெம் மருத்துவமனைடாக்டர்பழனிவேலுவுக்கு பாராட்டு

Loading

கோவை
உலகின் முதல் சிறுதுளை மூலமாக அறுவை சிகிச்சைகளை செய்து சாதனை படைத்த கோவை ஜெம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பழனிவேலுவுக்கு, ஜப்பான் நாட்டில் கெளரவ விருது வழங்கி பாராட்டு விழா..
ஜப்பான் நாட்டின் ஒசாகா பகுதியில் கடந்த 23ம் தேதி முதல் 28ம் தேதி வரை, 78 வது, ஜாட்ஸ் ஆண்டு அறிவியல்  மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் நுண்துளை ஊடுருவல் அறுவை சிகிச்சையில் சிறந்து விளங்கும், கோவை ஜெம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சி. பழனிவேலுவுக்கு 78வது அறிவியல் மாநாட்டின் வெளிநாட்டு கெளரவ உறுப்பினர் எனும் பதவி வழங்கியும், விருதுகள் வழங்கியும், பாராட்டு விழா நடைபெற்றது. அவ்வாறு விருது பெற்ற மருத்துவர் கோவையில் உள்ள ஜெம் மருத்துவமனை வளாகத்தில் தனது வெற்றி பயணம் குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்பொழுது அவர் கூறியதாவது..
ஐப்பான் நாட்டில் ஆண்டு தோறும் அறிவியல் மாநாடு நடைபெறும். 78 வது மாநாடு சமீபத்தில் நடைபெற்றது இந்த மாநாட்டில், நுண்துளை ஊடுருவல் அறுவை சிகிச்சையில் முன்னோடியாக திகழும் தனக்கு மதிப்புமிக்க விருது வழங்கப்பட்டது. இதனை ஜாட்ஸ் மாநாட்டின் தலைவர் தகுஷி யசுடா வழங்கியதாகவும், நாடு முழுவதிலும் இருந்து வந்திருந்த உணவு குழாய் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் மத்தியில், சர்வதேச அளவில், தொராசிக் அறுவை சிகிச்சை குறித்தும், குறைந்த பட்ச ஊடுருவும் உணவுக்குழாய் அறுவை சிகிச்சை குறித்தும் சிறப்புரையாற்றியதாக தெரிவித்தார். உணவுக்குழாய் புற்றுநோய் என்பது 4வது மிகவும் பொதுவான புற்றுநோய் எனவும், வாழ்க்கை முறை மாற்றங்கள், உடல் பருமன், மற்றும் இரைப்பை அமில எதிர் பாய்வு நோய் காரணமாக இதன் பாதிப்பு ஏற்பட்டுகின்றது என தெரிவித்தார். தற்போது நான் செய்து வரும் அறுவை சிகிச்சை உணவுக்குழாய் புற்றுநோயாளிகளுக்கு மேம்பட்ட உயிர்வாழ்வு மற்றும் வாழ்க்கை தரத்தை அளிக்கின்ற வகையில் அமைந்துள்ளது என்பதை வெளிபடுத்தியதாகவும், இதற்காக தனது அறுவை சிகிச்சை முறையை ஏற்று கொண்டு ஜப்பான் தொராசிக் அறுவை சிகிச்சை அங்கீகாரம் தனக்கு வழங்க பட்டது. இதற்காக நான் பெருமை படுகின்றேன் என கூறினார்..
0Shares