அங்கன்வாடி ஊழியர்களின் நீண்டகால கோரிக்கை?
![]()
சேலம்
சேலம்அங்கன்வாடி ஊழியர்களின் நீண்டகால கோரிக்கைகளான பணி நிரந்தரம், பென்ஷன், பணிக்கொடை வழங்கிட கோரி மாநிலம் தழுவிய மாலை நேர ஆர்ப்பாட்டம்!
சேலம், தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் மாநில மையம் அங்கன்வாடி ஊழியர்களின் நீண்டகால கோரிக்கைகளான பணி நிரந்தரம், பென்ஷன், பணிக்கொடை வழங்கிட கோரி மாநிலம் தழுவிய மாலை நேர ஆர்ப்பாட்டம், சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்றது. இதில், கௌரவத் தலைவர் சரோஜா, மாநில துணைத்தலைவி காசாம்பு, மாவட்டத் தலைவர் பிரேமா, மாவட்ட செயலாளர் மனோன்மணி, மாவட்ட பொருளாளர் சாவித்திரி, மாநில செயற்குழு உறுப்பினர் சடையம்மாள், மாநில துணைத்தலைவர்கள் இந்து, மாதேஸ்வரி, வண்ணக்கிளி, மகாலட்சுமி, தனலட்சுமி, உமையாள், லட்சுமி, பொற்கொடி, கல்பனா, சுப்புலட்சுமி, வசந்தலட்சுமி, மாநில கிளை செயலாளர் சுதா, சரஸ், ஜெயலட்சுமி, அருள்மொழி, கோகிலா, விஜியா, ஷர்மிளா, தனபாக்கியம், செந்தமிழ்செல்வி, ரம்யா ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, கோரிக்கைகள் அங்கன்வாடி ஊழியர் உதவியாளர்களை அரசு ஊழியராக்கிடுக, குடும்ப வரன் முறையுடன் கூடிய ஓய்வூதியம் வழங்கிடுக, அங்கன்வாடி ஊழியருக்கு பணிக்கொடையாக 10- லட்சமும் உதவியாளருக்கு 5- லட்சமும் வழங்கிடுக, 93-ல் பணியில் சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்களுக்கு மேற்பார்வையாளர்கள் பதவி உயர்வு உடனடியாக வழங்கிட வேண்டும், மையப் பணிகளை செய்வதற்கு 5 ஜி செல்போன், 5 ஜி சிம் கார்டு வழங்கிடுக, காலி பணியிடங்களை முழுமையாக நிரப்புக, மே மாதம் முழுவதும் விடுமுறை வழங்கிடுக, தேர்வு செய்யப்பட்டவர்களின் உடனடியாக பணி நியமான ஆணை வழங்கிடுக என 25 கோரிக்கைகளை முன் வைத்தனர். இதில், மாநிலம் தழுவிய மாலை நேர ஆர்ப்பாட்டத்தில் அனைத்து அங்கன்வாடி ஊழியர்களும் உதவியாளர்களும் கலந்து கொண்டனர்.

