திருவள்ளூர் சரித்திர பதிவேடு குற்றவாளி கொலை
![]()
திருவள்ளூர் அருகே சரித்திர பதிவேடு குற்றவாளி கொலை : மணவாள நகர் போலீசார் விசாரணை :
திருவள்ளூர் நவ 06 : திருவள்ளூர் அடுத்த மணவாள நகர் கபிலர் நகரை சேர்ந்தவர் நவீன் என்கிற குள்ள சீனு (24). சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது கஞ்சா விற்பனை, கொலை வழக்கு போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் எம்ஜிஆர் நகர் ஏரிக்கரை ஓரத்தில் இளைஞர் ஒருவர் தலையில் கல்லை போட்டும் வெட்டியும் கொலை செய்யப்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் மணவாளநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து விரைந்து வந்த மணவாளநகர் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இது குறித்து வழக்குப் பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டு கிடந்தது மணவாளநகர் கபிலர் நகர் பகுதியைச் சேர்ந்த நவீன் (எ) குள்ள சீனு (24) என்பது தெரியவந்தது. சரித்திர பதிவேடு குற்றவாளியான இவன் மீது கஞ்சா விற்பனை, கொலை வழக்கு போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.
ஏற்கனவே நவீன்(எ) குள்ள சீனு மீது பல்வேறு வழக்கில் தொடர்பு இருப்பதால் இந்த கொலையில் ஈடுபட்டது யார் என்பது குறத்து மணவாளநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திமுக ஆட்சியில் நாள்தோறும் கொலைச் சம்பவங்கள் சர்வசாதாரணமாக அரங்கேறுவதாக பொது மக்கள் சார்பாக குற்றம் சாட்டுகின்றனர்.இந்த சம்பவம் மணவாளநகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

