புதுச்சேரி குடிநீர்தட்டுப்பாடு உடனடிநடவடிக்கை

Loading

புதுச்சேரி நவ-06
புதுச்சேரி உப்பளம் தமிழ்த்தாய் நகரில் குடிநீர் தட்டுப்பாடு உடனடியாக நடக்க நடவடிக்கை எடுத்த அனிபால் கென்னடி எம்எல்ஏ
புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குட்பட்ட தமிழ்த்தாய் நகரில் கடந்த சில மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வந்தது. இதையடுத்து அப்பகுதி பொது மக்கள் திமுக உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்களிடம் பிரச்சினை குறித்து புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து உடனடியாக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் பேசி அப்பகுதியில் புதிய குடிநீர் குழாய் இணைப்பு (பைப் லைன்) அமைக்கும்படி கேட்டுக்கொண்டார். அதன் பேரில் அதிகாரிகள் பணிகளை தொடங்கினர். தற்போது 90 சதவீத குடிநீர் பிரச்சினைகள் தமிழ்த்தாய் நகரில் தீர்க்கப்பட்டுள்ளன.
பாவாட படையாட்சி வீதியில் மட்டும் இன்னும் பணிகள் நடைபெறாத நிலையில், அவற்றையும் விரைவில் செய்து முடிக்குமாறு சட்டமன்ற உறுப்பினர் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். அதற்கமைய அதிகாரிகள் விரைவில் அந்தப் பணிகளையும் நிறைவு செய்வதாக உறுதியளித்தனர்.
நடைபெற்று வரும் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் பொறியாளர் கணேசன், தொகுதி செயலாளர் சக்திவேல், கிளை செயலாளர்கள் காந்தி, ராகேஷ், கழக சகோதரர் ஆறுமுகம், மாணவர் அணி பவி ஆகியோர் உடன் இருந்தனர்.
0Shares