கோவையில் பெண்கள் பாதுகாப்பு குறித்து குறும்படம்
![]()
கோவை
கோவையில் நடைபெற்ற சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கில், பெண்கள் பாதுகாப்பு குறித்து குறும்படம் வெளியீடு செய்யப்பட்டது. இதனை
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் நீதிபதி பாலசந்திரன் வெளியிட்டார்..
அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின், தேசிய கௌரவ தலைவரும், முனைவர் நீதியரசருமான, கற்பக விநாயகம் வழிகாட்டுதல் படி அமைப்பின் நிறுவனத் தலைவரும், முனைவருமான, ஆர்.கே.குமார் தலைமையில், சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு, கோவையில் உள்ள தனியார் உணவக அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பெண்கள் பாதுகாப்பு குறித்த குறும்படம் மற்றும் சுற்றுச்சூழலை காக்க மரம் வளர்ப்பது குறித்த குறும்படங்கள் வெளியிடப்பட்டது.
இந்த குறும்படங்களில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் எவ்வாறு தங்களை சட்டப்படி காத்துக்கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வெளியிடப்பட்டது.மேலும் பசுமையான சுற்றுச்சுழலை உருவாக்கும் நோக்கில் மரங்கள் பாதுகாப்பு மற்றும் புதிய மரங்களை நடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை எடுத்துரைக்கும் விதமாக இந்த குறும்படம் அமைந்தது.
இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக முன்னாள் மாவட்ட நீதிபதி பாலசந்திரன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து இந்திய சட்டம் என்ற தலைப்பில் மூத்த வழக்கறிஞர் சுந்தரவடிவேலு உரையாற்றினார். .
இவரை தொடர்ந்து சட்டமே பாதுகாப்பு என்ற தலைப்பில் மூத்த வழக்கறிஞர் தேன்மொழி இந்திய அரசியல் அமைப்பு சட்டம் எவ்வாறு வெகுஜன மக்களை பாதுகாப்பு வழங்குகின்றது என்பதனை மிகவும் தெளிவாகவும் அனைவரும் எளிதில் புரியும் வகையில் எடுத்துரைத்தார்.
அவரை தொடர்ந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வழக்கறிஞர் பரமேஸ்வரி பேசினார். இந்த நிகழ்ச்சியில் கற்பகம் உயர்கல்வி அகாடமியின் நிறுவனத்தலைவர் கதிரவன், செந்தில்குமார், வழக்கறிஞர் ஜெயபிரகாஷ், டாக்டர் ராஜேந்திரன், மோகனசாமி, சந்தீப் ஆரோக்கிராஜ், மகளிரணி மாவட்ட துணை தலைவர் எல்ஐசி சாந்தி, அமைப்பின் பொதுச்செயலாளர் வி.எச்.சுப்ரமணியம் மாநில மகளிரணி தலைவி லதா அர்ஜூனன், மாநில தலைவர் ராஜேஷ்குமார், திருப்பூர் மாவட்ட துணைத் தலைவரும் குறும்பட இயக்குனருமான குமார் தங்கவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

