மு.க.ஸ்டாலின்அவர்களுக்கு உள்ளம் கனிந்த நன்றி
![]()
திருவள்ளூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஜூலை மாதம் 15 ஆம் தேதியில் இருந்து ஆரம்பித்து தற்போது வரை நடைபெற்று வருகிறது. இதில் தற்போது வரை 886 மனுக்கள் பெறப்பட்டு அதில் மின்கலனால் இயங்கும் வாகனம் ஒன்றின் விலை ரூ. 1,05000 என மூன்று (3) மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 3,15000 மதிப்பில் வழங்கப்பட்டது. பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி ஒன்றின் விலை ரூ. 1,14,400 என மூன்று (3) மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3,43,200 மதிப்பில் வழங்கப்பட்டது. மடக்கு சக்கர நாற்காலி ஒன்றின் விலை ரூ. 15,750 என இருபத்தி ஒன்பது (29) மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 4,56,750 மதிப்பில் வழங்கப்பட்டது. மூன்று சக்கர சைக்கிள் ஒன்றின் விலை ரூ. 11445 என இரண்டு (2) மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 22,890 மதிப்பில் வழங்கப்பட்டது. காதுக்கு பின்னால் அணியும் காதொலி கருவி ஒன்றின் விலை ரூ.3,285 என நாற்பத்தி ஐந்து (45) மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 147,825 மதிப்பில் வழங்கப்பட்டது ஆக மொத்தம் ரூ.12,85,665 மதிப்பிலான நலத்திட்டங்கள் மாற்றுத்திறனாளி நலத் துறை வாயிலாக செயல்படுத்தப்பட்டது.திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கடந்த 27.10.2025 அன்று சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் மனு கொடுத்து உடனடி தீர்வாக மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வாயிலாக மூளை முடக்குவாதம் உள்ளிட்ட இதர குறைப்பாட்டினால் இரண்டு கால்கள் பாதிப்படைந்த 6 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.6.30,000 மதிப்பில் மின்கலன் பொருந்திய சக்கர நாற்காலியாகவும், மூன்று சக்கர வாகனமாகவும் பயன்படுத்தக்கூடிய இணைக்கும் வசதி கொண்ட மின்கலனால் இயங்கும் உபகரணங்களை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் வழங்கினார்.
இத்திட்டத்தில் பயனடைந்த திருவள்ளூர் மாவட்டம் பனையஞ்சேரி கருணீகர் தெரு எண்.87D பகுதியை சேர்ந்த விஷ்ணு மூளை முடக்குவாதம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி ஆவார்.இவர் ”உங்களுடன் ஸ்டாலின்’’ முகாமில் மனு வழங்கினார். மனுவை உடனடியாக பரிசளித்து ரூ.1,05,000 மின்கலனால் இயங்கும் வாகனம் வழங்க ஆணை வழங்கப்பட்டு 27.10.2025 அன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் வழங்கினார். ”உங்களுடன் ஸ்டாலின்’’ மாற்றுத்திறனாளியான என்னை போன்றவர்களின் கோரிக்கை மற்றும் நீண்ட நாள் கனவுகளை நிறைவேற்றி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எங்கள் மனம் நிறைந்து நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

