அரசு நடுநிலைப் பள்ளியில் பல் மருத்துவ முகாம்

Loading

புதுச்சேரி அக்-30
புதுச்சேரி உப்பளம் தொகுதி  அரசு நடுநிலைப் பள்ளியில் பல் மருத்துவ முகாம் – எம்எல்ஏ அனிபால் கென்னடி தொடங்கி வைத்தார்
புதுச்சேரி உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட வாணரப்பேட்டை பகுதியில் உள்ள தாவிதுபேட்டை காமராஜ் அரசு நடுநிலைப்பள்ளியில்  மாணவர்களுக்கு பல் மருத்துவ முகாம்   சிறப்பாக நடைப்பெற்றது.
முகாமிற்கு  உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள்  கலந்துகொண்டு பல் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.
மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவ கல்லூரியின் முதல்வர் டாக்டர் கென்னடி பாபு  மற்றும் குழந்தை மற்றும் பல் மருத்துவத்துறை தலைவர் டாக்டர் அருண் பிரசாத் ராவ் தலைமையிலான மருத்துவ குழு,  மருத்துவர்கள் நந்தகுமார், திவ்யபாரதி, அர்ஷிதா, அஃப்ரீன், அஞ்சனா, விஜயகுமார், எழில்வதனி, சஞ்சனா மற்றும்  சாருமதி  ஆகியோர் மாணவர்களின் பற்களை ஆய்வு செய்து, பற்களை சுத்தம் செய்தல், கரையை நீக்குதல், பற்களை அடைத்தல்  மற்றும் மாணவர்களுக்கு தேவையான பல் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு முறைகளை விளக்கி கூறினார்கள்.
 விழாவிற்கு பொறுப்பாசிரியை வி. வசுதா தலைமை தாங்கினார். ஆசிரியர் இரா. ஆனந்தராஜ் வரவேற்புரை வழங்கினார். உடன் மாநில பிரதிநிதி கணேசன், தொகுதி கிளை செயலாளர்கள் சந்துரு, ராகேஷ், கழக சகோதரர் ஆறுமுகம் , வின்சன்ட் ஆகியோர் உடன் இருந்தனர்
0Shares