ராமகிருஷ்ணா மருத்துவமனை விழிப்புணர்வுபதாகை

Loading

பக்கவாதம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய ராமகிருஷ்ணா மருத்துவமனை!. 
உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர்கள், பொதுமக்களின்  விழிப்புணர்வுக்காக பக்கவாத விழிப்புணர்வு பதாகையை வெளியிட்டனர்
கோவை மாநகரின், முன்னணி பல்நோக்கு மருத்துவமனைகளில் ஒன்றான ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, பக்கவாத விழிப்புணர்வு மற்றும் அதன் தடுப்பு குறித்த அறிவார்ந்த குழு கலந்துரையாடல் நிகழ்ச்சியை மருத்துவமனை வளாகத்தில் நடத்தியது. பொதுமக்களுக்கு பக்கவாதம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இநுத  கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றதுடன், பக்கவாத விழிப்புணர்வு பதாகையை வெளியீட்டு விழா நிகழ்ச்சியும்  நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நரம்பியல் துறைத் தலைவர் மற்றும் தலைமை நரம்பியல் நிபுணர் டாக்டர் அசோகன் வரவேற்புரையாற்றினார். சமூகத்தில் நோய் தடுப்பு விழிப்புணர்வை வளர்ப்பதில் மருத்துவமனையின் உறுதிப்பாட்டை அவர் தெரிவித்தார். ஆரம்ப அறிகுறிகளை உடனடியாகக் கவனிப்பதும், தகுந்த மருத்துவ உதவியைத் தேடுவதும்,  சரியான சிகிச்சை மற்றும் புனரமைப்பு வழங்குவதும் பக்கவாத  நோயாளி மீண்டுவர உதவுகிறது என தெரிவித்தார்.
மேலும், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நரம்பியல் மற்றும் நரம்பியல் துறையைச் சேர்ந்த சிறப்பு நிபுணர்கள் குழுவினர் பக்கவாதம் குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடத்தினர். இதில் பொதுமக்களுக்கு பக்கவாதம் குறித்து பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில், ஸ்ரீ இராமகிருஷ்ணா மருத்துவமனையின் தலைமை நரம்பியல் நிபுணர்கள், டாக்டர் கே. அசோகன்,  டாக்டர் கே. அருணா தேவி, டாக்டர் வேதநாயகம், டாக்டர் எம். விக்ரம், டாக்டர்  திவ்யா, டாக்டர் முத்துராஜன் ஆகியோர் ஆகியோருடன்   தலைமை செயல் அதிகாரி ஸ்ரீ சி.வி. ராம்குமார், தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீ டி. மகேஷ் குமார் மருத்துவ இயக்குநர் டாக்டர் எஸ். ராஜகோபால் மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் எஸ். அழகப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
0Shares